Gemini AI: பழைய பன்னீர்செல்வத்தை (Assistant) மறந்துடுங்க.. இனிமே எல்லாம் ஜெமினி தான்!

 


ஆண்ட்ராய்டு போன் வச்சிருக்கவங்க எல்லாருக்குமே இந்த Google Assistant பத்தி நல்லாத் தெரியும். இத்தனை வருஷமா நமக்கு வாய்ஸ் கமெண்ட் மூலமா ஹெல்ப் பண்ணிட்டு இருந்த இந்த அசிஸ்டண்ட்டை, இப்போ கூகுள் நிறுவனம் அப்படியே Gemini-ங்கிற புது AI-க்கு மாத்திக்கிட்டு இருக்காங்க. வர்ற 2026-க்குள்ள எல்லா போன்லயும் அசிஸ்டண்ட்டுக்கு பதிலா ஜெமினி தான் ராஜாவா இருக்கப்போகுது.

ரொம்ப காலமாவே நம்ம காலண்டர், மெயில், மேப்ஸ்னு எல்லாத்துலயும் கூகுள் அசிஸ்டண்ட் பின்னி பிணைஞ்சு இருக்கு. கிச்சன்ல வேலை செஞ்சிட்டு இருக்கும்போதோ இல்ல வண்டி ஓட்டிட்டு இருக்கும்போதோ, போனை தொடாமலேயே "ஒரு பாட்டை போடு", "ரிமைண்டர் செட் பண்ணு"னு சொன்னா உடனே செஞ்சிடும். அதுலயும் அந்த 'வாய்ஸ் மேட்ச்' வசதி இருக்கே.. பேசுறது யாருன்னு கண்டுபிடிச்சு, கரெக்டா அவங்களுக்கேத்த மாதிரி பதில் சொல்லும்.

ஜெமினி வெறும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மட்டும் கிடையாது, இது ஒரு செம்ம புத்திசாலியான AI. நாம என்ன கேக்குறோம், எதுக்காக கேக்குறோம்ங்கிற சூழலை இது ரொம்ப நல்லா புரிஞ்சுக்கும். இதால புதுசு புதுசா போட்டோக்களை உருவாக்க முடியும், பெரிய கட்டுரையை சுருக்கி தர முடியும், ஏன்.. மத்த மொழியை அப்படியே மொழிபெயர்த்தும் கொடுக்கும். 2026-ல வர்ற புது அப்டேட் படி, நாமளே எதுவும் பண்ண வேணாம், நமக்காக இதுவே போன்ல மத்த ஆப்ஸ் மூலமா டிக்கெட் புக்கிங் பண்றது, ஆர்டர் பண்றதுனு எல்லா வேலையும் செஞ்சு முடிச்சிடும்.

உங்களுக்கு தினமும் வேகவேகமா வேலை நடக்கணும், சிம்பிளா டைமர் செட் பண்றது, லைட் ஆஃப் பண்றது இதெல்லாம் போதும்னா நீங்க அசிஸ்டண்ட்டையே யூஸ் பண்ணலாம்.

"எனக்கு இன்னும் ஸ்மார்ட்டா ஒரு ஆள் வேணும், என்கூட அரட்டை அடிக்கணும், எல்லாத்தையும் பிளான் பண்ணித் தரணும்"னு நினைக்கிறவங்க ஜெமினிக்கு மாறிடலாம். 2026-ல இது ஒரு பர்சனல் செக்ரட்டரி மாதிரியே மாறிடும்.

இப்போதைக்கு ரெண்டுமே இருந்தாலும், போகப்போக ஜெமினி தான் ஃபுல் ஃபார்ம்ல இருக்கும். கூகுள் அசிஸ்டண்ட் ஆரம்பிச்சு 10 வருஷம் ஆகுற 2026-ல, அசிஸ்டண்ட்டுக்கு மெதுவா டாட்டா காட்டிட்டு, ஜெமினியை முன்னாடி கொண்டு வரப்போறாங்க.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ProWritingAid AI: தப்பான வார்த்தை உங்க கதையில இருந்தா அது வெறும் எழுத்து… ஆனா ProWritingAid கை வச்சா, அது ஒரு சரித்திரம்! இவர் தான் மிஸ்டர் பெர்ஃபெக்ட்!”

Pomelli AI: டெம்ப்ளேட் தேடுறது எல்லாம் பழைய மாடல்… நம்ம வெப்சைட்டையே டெம்ப்ளேட்டா மாத்துறதுதான் Google Pomelli கேன்வா-வுக்கே டஃப் கொடுக்குமா?

Livestorm: வெபினார் நடத்துறது இப்போ விளையாட்டு மாதிரி! குழப்பமில்லாத டேஷ்போர்டு, குறையில்லாத வேகம்… இது டெக்னாலஜியோட அடுத்த கட்டம்! அதுதான் Livestorm மேஜிக்..!