GoDaddyன்னா இதுவரைக்கும் டொமைன் விக்கிற தளம்ன்னு தானே நினைச்சிங்க.. ஆனால் அது ஒரு AI செஞ்சு தர்ற தளம்ன்னு யாருக்காவது தெரியுமா?
இன்னைக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த பிசினஸை ஆன்லைனுக்கு கொண்டு போறதும் முக்கியம். ஆனா, ஒரு வெப்சைட் ஆரம்பிக்கிறது அப்படின்னாலே கோடிங் தெரியணும், டிசைன் பண்ண தெரியணும்னு பல பேர் தயங்குறாங்க. அவங்களுக்காகவே வந்திருக்கிறதுதான் GoDaddy. இது வெறும் டொமைன் விக்கிற இடம் மட்டும் இல்ல, இப்போ AI மூலமா ஈஸியா வெப்சைட் செஞ்சு தர்ற ஒரு தளமா மாறியிருக்கு.
இது யாருக்கெல்லாம் செட் ஆகும்? சொந்தமா ஒரு தொழில் பண்றவங்களுக்கும், சின்ன பிசினஸ் ஓனர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். முக்கியமா டெக்னாலஜி பத்தி பெருசா ஒண்ணும் தெரியாதவங்க கூட சில நிமிஷத்துல ஒரு சூப்பர் வெப்சைட் பண்ணிடலாம்.
இதோட ஸ்பெஷல் என்ன?
உங்க பிசினஸ் பத்தி சில கேள்விகளுக்கு பதில் சொன்னா போதும். போட்டோகிராபியா, ரியல் எஸ்டேட்டா இல்ல எதுவாயிருந்தாலும் உங்க தொழிலுக்கு ஏத்த மாதிரி AI-யே ஒரு வெப்சைட்டை ரெடி பண்ணிடும்.
முன்னாடியே ரெடி பண்ணி வெச்ச டிசைன், கன்டென்ட் எல்லாம் இருக்கறதால, நீங்க எதையும் ஜீரோவுல இருந்து பண்ண தேவையில்லை.
லோகோ ரெடி பண்றதுல இருந்து, இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடுறது, ஈமெயில் மார்க்கெட்டிங் பண்றதுன்னு எல்லா வேலையும் ஒரே இடத்துல முடிஞ்சிரும்.
PayPal பட்டன் வைக்கிறது, அப்பாயிண்ட்மென்ட் புக்கிங் பண்றதுன்னு எல்லாத்தையும் அசால்ட்டா செட் பண்ணிடலாம்.
நீங்க இதை எப்ப வாங்கலாம்?
ஒரு வெப்சைட் தானாவே அதுக்கான மார்க்கெட்டிங் வேலையையும் பார்க்கணும்னு நீங்க ஆசைப்பட்டா.
எங்க ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம குழப்பத்துல இருந்தீங்கன்னா AI உங்களுக்கு கை கொடுக்கும்.
எப்ப தவிர்க்கலாம்?
வெப்சைட்டோட ஒவ்வொரு மூலையையும் நானே தான் டிசைன் பண்ணுவேன், எனக்கு என்னோட ஸ்டைல் அதிகமா வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது கொஞ்சம் கம்மி தான்.
காசு எவ்வளவு ஆகும்?
இதோட பேசிக் பிளான் ஒரு வருஷத்துக்கு மொத்தமா எடுத்தா, மாசத்துக்கு வெறும் $9.99ல இருந்து ஆரம்பிக்குது. 24 மணி நேரமும் கஸ்டமர் கேர் சப்போர்ட் உண்டு. ஆரம்பத்துல செக் பண்ணி பார்க்க ஒரு ஃப்ரீ பிளானும் இருக்கு.

கருத்துகள்
கருத்துரையிடுக