Granola AI : மீட்டிங்ல நீங்க Points எடுக்க வேண்டாம், Participate பண்ணுங்க! மீதி வேலையை Granola AI பாத்துக்கும்… சில நிமிடங்களில் உங்கள் கையில் Full Reports..!



AI தொழில்நுட்பம் இன்று நாம் நினைத்து பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AIன் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்டது. அந்த வகையில், அலுவலக கூட்டங்களில் அமர்ந்திருக்கும்போது, பேசப்படும் விஷயங்களை கவனித்துக்கொண்டே குறிப்புகள் எடுப்பது என்பது ஒரு சவாலான காரியம். இந்த வேலையை தற்போது Granola என்ற AI Notepad மிகவும் எளிமையாக்கியுள்ளது.


பாட்கள் இல்லாத டிரான்ஸ்கிரிப்ஷன்


பொதுவாக மீட்டிங் நோட்ஸ் எடுக்கும் AI கருவிகள், ஒரு Bot போல மீட்டிங்கில் நுழையும். ஆனால், Granola உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆடியோவை நேரடியாக கேட்டு, பேசப்படும் அனைத்தையும் உரையாக மாற்றும். உங்கள் அழைப்பில் எந்தவிதமான வெளி Botகளும் இணையாது என்பது இதனுடைய மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இது மீட்டிங்கின் இயல்பான சூழலை பாதிக்காமல் ரகசியமாகவும் துல்லியமாகவும் செயல்படும்.


தெளிவான மற்றும் நேர்த்தியான நோட்ஸ்


மீட்டிங் முடிந்தவுடன், நீங்கள் மேலோட்டமாக எழுதிய குறிப்புகளையும், AI பதிவு செய்த முழுமையான உரையாடலையும் இணைத்து, மிகவும் தெளிவான மற்றும் நேர்த்தியான நோட்ஸ் ஆக இது உங்களுக்கு வழங்கும். இதனால் முக்கியமான தகவல்கள் விடுபட்டுப் போகுமோ என்ற பயம் தேவையில்லை. ஒரு நீண்ட உரையாடலை மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இது சுருக்கி கொடுக்கிறது.


வேலைகளைப் பட்டியலிடும் திறன்


ஒரு மீட்டிங்கின் முடிவில், யார் யாருக்கு என்னென்ன வேலைகள் ஒதுக்கப்பட்டன என்பதை அடையாளம் காண்பது மிக முக்கியம். Granola மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை துல்லியமாக கண்டறிந்து, அவற்றை ஒரு பட்டியலாக வழங்குகிறது. இதனால் மீட்டிங் முடிந்த பிறகு குழுவினருக்கு வேலைகளை பிரித்து கொடுப்பது எளிதாகிறது.


ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் தனித்துவமான டிசைன்


நீங்கள் கலந்துகொள்வது வாடிக்கையாளர் நேர்காணலா, ஒருவருக்கொருவர் பேசும் ஒன்-ஆன்-ஒன் மீட்டிங்கா அல்லது குழு மீட்டிங்கா என்பதை பொறுத்து, இதில் தனித்தனியான Templatesகளை பயன்படுத்தலாம். மேலும், மீட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட விஷயம் யாரால் பேசப்பட்டது அல்லது எப்போது பேசப்பட்டது என்பதை Granolaவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ‘சாட் வித் டிரான்ஸ்கிரிப்ட்’ வசதியும் இதில் உள்ளது.


எளிதான பகிர்வு மற்றும் வல்லுநர்களின் பாராட்டு


இங்கு எடுக்கப்பட்ட குறிப்புகளை Slack அல்லது Notion போன்ற தளங்களில் ஒரே கிளிக்கில் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த கருவியை வெறும் நோட்ஸ் எடுக்கும் கருவி மட்டுமல்ல, ஆவணங்களை தயாரிக்கும் முறையையே மாற்றியமைக்கும் புரட்சி என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். பிஸியான மீட்டிங் ஷெட்யூல் கொண்ட ப்ராடக்ட் மேனேஜர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு Granola ஒரு வரப்பிரசாதமாகும்.

Icon AI: கேமரா இல்ல… ஆக்ஷன் இல்ல… ஆனா சூப்பர் ஹிட் விளம்பரம் ரெடி! இதுதான் Icon பண்ணுற AI மாயாஜாலம்!