AI Job: இன்னும் 10 வருஷத்தில் AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு துறை எப்படி இருக்கும்? வெறும் டிகிரி இனி வேலைக்கு ஆகாது..!

AI Job

 AI தொழில்நுட்பம் மற்ற எல்லா துறைகளையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருவது, ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும் மறுபுறம் ‘வேலை இழப்பு’ குறித்த அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளது. ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்புப்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு AI மாற்றியமைக்க போகிறது. இது சில வேலைகளை மாற்றினாலும், பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி, மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் ஒரு உந்துசக்தியாக திகழும்.


தானியங்கி மயமாக்கலும் வேலை மாற்றமும்


தற்போது மனிதர்கள் செய்து வரும் வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளை AI மிக எளிதாக தானியங்கி மயமாக்கி வருகிறது. குறிப்பாக டேட்டா என்ட்ரி, கஸ்டமர் சர்வீஸ், கணக்கு வழக்குகள் பார்த்தல் மற்றும் அடிப்படை Coding எழுதுதல் போன்ற துறைகளில் AIயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அங்கு வேலை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இருப்பினும், இந்த மாற்றமானது மனிதர்களை கடினமான உழைப்பிலிருந்து விடுவித்து, அதிக ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வழிவகை செய்கிறது.


புதிய வேலைவாய்ப்புகளின் உதயம்


AI சில வேலைகளை பறித்தாலும், அதற்கு ஈடாக பல புதிய வேலைகளையும் உருவாக்கித் தருகிறது. குறிப்பாக, Prompt Engineers, ஏஐ நெறிமுறை அதிகாரிகள் மற்றும் AI சிஸ்டம்களை பராமரிக்கும் நிபுணர்களுக்கான தேவை உலக அளவில் பல மடங்கு அதிகரிக்கும். அடுத்த பத்து ஆண்டுகளில், இன்று நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இது பொருளாதார வளர்ச்சியை சீராக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் மாற்றம்


மருத்துவத்துறையை பொறுத்தவரை, நோய்களை துல்லியமாகக் கண்டறிதல் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் AIயின் பங்கு அளப்பரியதாக இருக்கும். இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்குமே தவிர, அவர்களின் தேவையை ஒருபோதும் குறைக்காது. அதேபோல் கல்வித்துறையில், ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறனுக்கேற்ப பாடங்களை மாற்றியமைக்கும் முறை நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்கு உதவியாக AI கருவிகள் செயல்படுமே தவிர, ஒரு ஆசிரியரின் இடத்தை AI முழுமையாக நிரப்ப முடியாது.


மனித உணர்வுகளின் தனித்துவம்


இயந்திரங்கள் எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக மாறினாலும், மனிதர்களுக்கே உரிய தனித்துவமான உணர்ச்சிகள், பச்சாதாபம், தலைமைப் பண்பு மற்றும் இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றிற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனால் பேச்சாளர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான கலைஞர்களுக்கான தேவை என்றும் குறையாது. AIயால் தகவல்களை தர முடியுமே தவிர, மனித உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது என்பதே நிதர்சனம்.


தொடர் கற்றலும் அப்டேட்களும்


AI மனிதர்களை ஒருபோதும் மாற்றாது, AI பயன்படுத்த தெரிந்த ஒரு மனிதர்தான் இன்னொரு மனிதரை மாற்றுவார்” என்பதே எதிர்காலத்தின் தாரக மந்திரமாகும். இனி வரும் காலங்களில் ஒரே ஒரு பட்டப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, தொழில்நுட்ப அறிவு இல்லாமல் காலம் தள்ள முடியாது. மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் காலத்திற்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்வது அவசியமாகும்.


மென்பொருள் துறையின் புதிய பரிணாமம்


மென்பொருள் துறையில் அடிப்படை கோடிங்குகளை AI கருவிகளே எழுதும் நிலை உருவாகும். இதனால் மென்பொருள் பொறியாளர்கள் வெறும் ‘கோடிங்’ செய்பவர்களாக சுருங்காமல், AI உருவாக்கிய மென்பொருளை சரிபார்க்கும் AI Supervisors ஆக உருவெடுப்பார்கள். இது மென்பொருள் உருவாக்கத்தின் வேகத்தையும் தரத்தையும் பல மடங்கு அதிகரிக்கும். மொத்தத்தில், AI ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், நீண்ட கால அடிப்படையில் அது பல புதிய மற்றும் உயர்தரமான வேலைவாய்ப்புகளையே உருவாக்கும்.


இனிமே எங்க ‘எழுத்து’ சும்மா கிடைக்காது… அதுக்கும் ஒரு ‘விலை’ இருக்கு! அமேசான் புதிய முயற்சியால் Content Creators மகிழ்ச்சி..!