AI Browsers : Chrome, Perplexity, Komo, Brave, Firefox.. இவையெல்லாம் பிரவுசர்ஸ், சியர்ச் எஞ்சின்கள் என்பது தெரியும்.. ஆனால் இதில் உள்ள வித்தியாசங்கள் என்ன தெரியுமா?

 

AI Browsers

இன்றைய டிஜிட்டல் உலகில் சியர்ச் எஞ்சின்கள் மற்றும் பிரவுசர்கள் என்பது இணையத்தை பயன்படுத்த இன்றியமையாதது எனினும் நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் ஒவ்வொன்றிலும் முற்றிலும் மாறிபட்டவை. கூகுள் குரோம் என்பது பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிரவுசராக இருந்தாலும், தற்போது மக்கள் அதிகம் கவனிக்கும் முக்கிய பிரவுசர்கள் மற்றும் தேடுபொறிகளும் அறிமுகமாகி பிரபலமாகி வருகின்றன.


மேலும் இன்று AI தொழில்நுட்பத்தால் பிரவுசர்களும், சியர்ச் எஞ்சின்களும் புதிய வடிவம் பெற்றுள்ளன. நாம் தகவல்களை தேடும் விதமும், அந்த தகவல்கள் நமக்கு காட்டப்படும் விதமும் ஒவ்வொரு தளத்திலும் மாறுபடுகிறது. இதில் பெர்ப்ளெக்சிட்டி, கோமோ, பிரேவ், குரோமா மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை பார்ப்போம்.


முதலில், Perplexity மற்றும் Komo ஆகியவை வெறும் சியர்ச் எஞ்சின்கள் மட்டுமல்ல; இவை AI அடிப்படையிலான பதிலளிக்கும் கருவிகள். Perplexity என்பது ஒரு ‘AI Search Engine’. இது நீங்கள் கேட்கும் கேள்விக்கு இணையத்தில் உள்ள பல தளங்களை ஆய்வு செய்து, ஒரு துல்லியமான பதிலை ஆதாரங்களுடன் பதில் வழங்கும். Komo என்பதும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான் என்றாலும், இது விளம்பரங்கள் இல்லாத, வேகமான மற்றும் Chat-based Searchக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


அடுத்ததாக, Brave மற்றும் Mozilla Firefox ஆகியவை முழுமையான இணைய உலாவிகள். பிரேவ் பிரவுசர் அதன் Privacy மற்றும் விளம்பரத் தடுப்பு வசதிக்காக பெயர் பெற்றது. இந்த பிரவுசரின் மூலம் யூடியூப் பார்த்தால் ஒரு விளம்பரம் கூட வராது. இது கூகுளின் குரோமியத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிக சிறந்தது. அதேபோல் Mozilla Firefox என்பது லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் நடத்தும் பிரவுசர். இது கூகுளின் கட்டுப்பாட்டில் இல்லாத தனித்துவமான சியர்ச் எஞ்சினிஅ பயன்படுத்துகிறது மற்றும் இணைய சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


இறுதியாக, Chroma என்பது பெரும்பாலும் ஒரு ‘Design’ அல்லது ‘Browser-based tool’ ஆகக் கருதப்படுகிறது. இது மற்ற பிரவுசர்களை போல பொதுவான பயன்பாட்டிற்கு இல்லாமல், குறிப்பிட்ட வண்ண தேர்வுகள் அல்லது இணைய உருவாக்க பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு கருவியாகும்.


சுருக்கமாக சொன்னால், உங்களுக்கு AI பதில்கள் வேண்டுமென்றால் Perplexity சிறந்தது, பாதுகாப்பு வேண்டுமென்றால் Brave மற்றும் Mozilla Firefox சிறந்தது. உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Cursor AI : இனிமே கோடிங் பண்றது கஷ்டம்னு சொல்றதுக்கு இடமே இல்ல… ஸ்மார்ட்டா யோசிச்சா, Cursor AI உங்களை ஒரு சூப்பர்மேனா மாத்திடும்!