AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால், இன்று பல கடினமான வேலைகள் எளிமையாகிவிட்டன. அந்த வகையில், மிகவும் சிக்கலானது என்று கருதப்பட்ட இணையதள உருவாக்கம் மற்றும் செயலி உருவாக்கம் ஆகியவற்றை மிக எளிதாக மாற்றியுள்ளது Bolt என்ற AI கருவி. நீங்கள் மென்பொருள் பொறியாளராக இல்லாவிட்டாலும், AI உடன் உரையாடுவதன் மூலமே ஒரு முழுமையான அப்ளிகேஷனை ஒருசில மணி நேரங்களில் உருவாக்கிவிட முடியும் என்பது இதன் மிகப்பெரிய சிறப்பாகும்.
பிழையற்ற கோடிங் மற்றும் அபார வேகம்
பொதுவாக ஒரு செயலியை உருவாக்கும்போது கோடிங்கில் ஏற்படும் பிழைகளை சரிசெய்வதற்கே அதிக நேரம் செலவாகும். ஆனால், போல்ட் AI தானாகவே உங்கள் கோடுகளை சோதித்து, பிழைகளை திருத்தி நேர்த்தியான அப்ளிகேஷனை வழங்குகிறது. இதனால், நீங்கள் பிழைகளை தேடி அலைவதை தவிர்த்து, உங்கள் செயலியை இன்னும் எப்படி சிறப்பாக மாற்றலாம் என்ற புதிய ஐடியாக்களில் அதிக கவனம் செலுத்த முடியும்.
சிக்கலான புராஜெக்ட்களையும் கையாளும் திறன்
முன்பு இருந்த AI கருவிகளை விட ஆயிரம் மடங்கு பெரிய மற்றும் சிக்கலான புராஜெக்ட்களை கையாளும் வகையில் இதன் மெமரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிறிய இணையதளம் மட்டுமல்லாமல், மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தேவையான சிக்கலான மென்பொருட்களையும் எவ்வித தடங்கலும் இன்றி உருவாக்க முடியும். இது தொழில்நுட்ப உலகில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும்
ஒரு இணையதளத்தை உருவாக்க Hosting, Database, மற்றும் User Management என பல சேவைகளை தனித்தனியாகத் தேட வேண்டியிருக்கும். ஆனால், Bolt Cloud இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இதனால் ஒரு முழுமையான வணிக இணையதளத்தை ஒரே இடத்தில் செய்து கொள்ளலாம்.
தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான வரப்பிரசாதம்
கோடிங் தெரியாத மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். உங்கள் ஐடியாக்களை ஒரு சில மணிநேரங்களில் Prototype மாற்றி சோதனை செய்ய இதில் வசதி உள்ளது. Figma டிசைன்களை நேரடியாக இறக்குமதி செய்வது முதல், GitHub உடன் இணைப்பது வரை அனைத்தும் ஒரே திரையில் நடப்பது ஆச்சரியமான விஷயம்.
டிஜிட்டல் உலகின் புதிய அத்தியாயம்
டிஜிட்டல் உலகில் எதையும் எளிதாகவும் வேகமாகவும் செய்யலாம் என்பதற்கு Bolt AI ஒரு மிகச்சிறந்த உதாரணம். டிசைன் சிஸ்டம் முதல் டேட்டாபேஸ் வரை அனைத்தும் இதில் இருப்பதால், நேர்த்தியான மற்றும் தரமான செயலிகளை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். இனி ஐடியா இருந்தால் போதும், அதை ஒரு நிஜமான தயாரிப்பாக மாற்ற Bolt AI உங்களுக்குத் துணையாக நிற்கும்.
