Canva AI : மத்தவங்க ஸ்லைடு போட்டு முடிக்கிறதுக்குள்ள, நீங்க Presentationஐ முடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்… அதான் Canva AI பவர்!

 

Canva AI

இன்றைய அலுவலக பணிகளில் பிரசன்டேஷன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் திட்டங்கள் அல்லது அறிக்கைகளை சமர்ப்பிக்க Presentations நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஆனால், ஒரு தரமான Presentations பவர்பாயிண்ட்டில் உருவாக்க வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் செலவாகும். ஒவ்வொரு ஸ்லைடையும் பார்த்து பார்த்து வடிவமைத்து, தகவல்களை சேகரித்து உருவாக்க வேண்டிய சிரமமான நிலை முன்பு இருந்தது.


ஆனால் தற்போது AI டெக்னாலஜி வந்த பிறகு, மணிக்கணக்கில் நடந்த வேலைகள் ஒரு சில நிமிடங்களிலோ அல்லது நொடிகளிலோ முடியும் எளிய காரியமாக மாறிவிட்டது. அந்த வகையில் மிக எளிமையாக Presentations செய்வதற்கு உதவும் ஒரு அற்புதமான கருவிதான் Canva AI என்பது குறிப்பிடத்தக்கது. இது பயனர்களுக்கு தேவையான டிசைன்களை தானாகவே சிந்தித்து உருவாக்கி தரும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.


இதனை பயன்படுத்துவதற்கு முதலில் Canva.com சென்று உங்கள் கணக்கில் லாகின் செய்ய வேண்டும். அங்குள்ள Presentation என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், திரையின் மேலே ஒரு Search Bar தோன்றும். அதில் உங்கள் Presentation எதை பற்றியது என்ற தலைப்பை மட்டும் உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது திரையில் தோன்றும் ‘மேஜிக் டிசைன்’ என்ற வசதியை கிளிக் செய்தால் போதும், உங்கள் வேலை பாதியாக குறைந்துவிடும்.


அதன்பின் நீங்கள் எந்தத் தலைப்பில் Presentation செய்யப் போகிறீர்களோ, அது குறித்து ஒரே ஒரு வரியை மட்டும் Prompt கொடுத்தால், அந்த தலைப்பிற்கு ஏற்றவாறு தேவையான ஸ்லைடுகள், தகவல்கள் மற்றும் படங்களை ஏஐ தானாகவே தேடி எடுத்து ஒரு முழுமையான Presentationஐ உருவாக்கிவிடும். திரையில் தோன்றும் பலவிதமான மாடல்களில் உங்களுக்கு பிடித்தமான வண்ணம் மற்றும் Fonts நீங்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.


ஸ்லைடுகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், Magic Write என்ற வசதியை பயன்படுத்தி வாசகங்களை சுருக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ முடியும். ‘மேஜிக் மீடியா’ மூலம் உங்கள் கற்பனைக்கு எட்டாத படங்களை கூட உருவாக்கி சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தும் முடிந்த பிறகு ‘ஷேர்’ பட்டனை அழுத்தி PDF அல்லது PPT வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சுருக்கமாக சொன்னால், Presentation என்பது முன்பு போல மணிக்கணக்கில் அமர்ந்து தயார் செய்யும் ஒரு கடினமான பணி அல்ல. ஏஐ உதவியுடன் மிகக்குறைந்த நேரத்தில், நேர்த்தியான மற்றும் புரொபஷனல் தோற்றம் கொண்ட Presentationஐ எவரும் உருவாக்கி விடலாம். தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சி அலுவலக பணிகளை எளிமையாக்கியது மட்டுமின்றி, நேரத்தையும் பெருமளவு சேமிக்க உதவுகிறது.


Shopify AI : வெறும் கடை போட்டா அது வியாபாரம்… ஆனா Shopify உதவியோட கடை போட்டா அது ஒரு சாம்ராஜ்யம்!