CoTester AI: மென்பொருள் சோதனையில் புரட்சியை ஏற்படுத்தும் உலகின் முதல் AI ஏஜென்ட்
பரபரப்பான டிஜிட்டல் உலகில் ஏராளமான டூல்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் ஒன்று சாப்ட்வேர் சோதனைகளில் புரட்சியை ஏற்படுத்திய CoTester என்ற AI ஏஜென்ட் ஆகும், இது பல அற்புதங்களை செய்து கொண்டிருக்கும் நிலையில் இதன் முழுமையான விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
Software Development துறையில் , தரக் கட்டுப்பாடு அல்லது டெஸ்டிங் என்பது மிக முக்கியமான ஒரு கட்டமாகும். இதனை எளிதாக்க, TestGrid நிறுவனம் CoTester என்ற அதிநவீன AI ஏஜென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Software Testing சோதனையை மனிதர்களை போலவே புரிந்துகொண்டு செயல்படுத்தும் திறன் கொண்டது.
CoTester என்றால் என்ன?
CoTester என்பது மென்பொருள் சோதனை கொள்கைகள் மற்றும் Software Development Life Cycle முறையில் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும். இது Codingஐ விட, எளிய மொழியில் வழங்கப்படும் கட்டளைகளை புரிந்துகொண்டு செயல்படுகிறது. வெறும் “Hi” என்று டைப் செய்வதன் மூலம் நீங்கள் இதனுடன் உரையாடலை தொடங்கி, டெஸ்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்
கடினமான ஸ்கிரிப்டுகள் தேவையில்லை. சாதாரண உரையாடல் மூலமே சோதனைகளை மேற்கொள்ளலாம்.
கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலமோ அல்லது இணையதள முகவரிகளை பகிர்வதன் மூலமோ உங்கள் நிறுவனத்தின் பிரத்யேக சோதனை முறைகளை இதற்குப் பயிற்றுவிக்கலாம்.
AI உருவாக்கிய டெஸ்ட் கேஸ்களை இயக்கிப் பார்த்து, அதில் உள்ள தவறுகளை சரிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
உங்களின் தரவுகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. நிறுவனத்தின் தரவுகள் வெளியே கசியாதவாறு ‘Security-First’ கொள்கையில் இது இயங்குகிறது.
CoTester குறிப்பாக மென்பொருள் தர உறுதிப் பொறியாளர்கள் தொடக்கநிலை ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் மற்றும் சுறுசுறுப்பான குழுக்களுக்குப் பெரிதும் உதவுகிறது. இ-காமர்ஸ், மருத்துவம், வங்கி மற்றும் சுற்றுலா என பல்வேறு துறைகளில் உள்ள இணையதளங்கள் மற்றும் செயலிகளை சோதிக்க இது ஏற்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக