CrewAI: ஒரு AIயை வச்சு வேலை வாங்குறது பழைய ஸ்டைல்… ஒரு AIடீமையே வச்சு வேலை வாங்குறது தான் CrewAI ஸ்டைல்! இது ஏஜெண்டுகளின் ஆதிக்கம்!


AI எ


AI என்பது அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு உதவும் ஒரு டெக்னாலஜி என்பதையும் தாண்டி, தற்போது AI Agentsகளின் காலம் வந்துவிட்டது. மனிதர்களை போலவே சுயமாக சிந்தித்து செயல்படும் இந்த ஏஜெண்டுகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான சிக்கலான பணிகளை தானாகவே செய்து முடிக்கும் ஏஜெண்ட் குழுக்களை உருவாக்கவும், அவற்றை நிர்வகிக்கவும் CrewAI ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது.


CrewAI தளம் இரண்டு வழிகளில் ஏஜெண்டுகளை உருவாக்க அனுமதிக்கிறது. கோடிங் பற்றி பெரிய தெளிவு இல்லாதவர்கள் ‘விஷுவல் எடிட்டர்’ மூலமாகவும், மென்பொருள் பொறியாளர்கள் ‘API’ மூலமாகவும் சக்திவாய்ந்த ஏஜெண்ட் குழுக்களை உருவாக்கலாம். இதன் மூலம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சலிப்பான வேலைகளை இந்த ஏஐ ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்துவிட்டு, மனிதர்கள் தங்களின் கவனத்தை இன்னும் ஆக்கப்பூர்வமான பணிகளில் செலுத்த முடியும்.


முக்கியமான பணிகளை ஏஐயிடம் ஒப்படைக்கும்போது அதன் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமாகும். CrewAIயில் உள்ள ‘டிரேசிங்’ வசதி மூலம், ஒரு ஏஜெண்ட் ஒவ்வொரு அடியையும் எப்படி எடுத்து வைத்தது என்பதை நாம் துல்லியமாக பார்க்கலாம். அதேபோல், Task Guardrails மூலம் ஏஜெண்டுகள் தங்களது எல்லை மீறாமல் இருப்பதையும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதையும் உறுதி செய்ய முடியும்.


CrewAI AMP என்பது ஒரு மேலாண்மைத் தளமாகும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கவும், ஜிமெயில், நோஷன், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஸ்லாக் போன்ற நிறுவன பயன்பாடுகளுடன் எளிதாக இணைக்கவும் முடியும். இது வாடிக்கையாளர் சேவையின் துல்லியத்தை 95% வரை அதிகரிப்பதோடு, ‘கோடு ஜெனரேஷன்’ போன்ற பணிகளில் நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தித்திறனை பல மடங்கு உயர்த்துகிறது.


இந்த குழுவை உருவாக்குவது மிகவும் எளிது. முதலில் உங்கள் குழுவில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மார்க்கெட்டிங் டீமுக்கு ‘சந்தை ஆராய்ச்சியாளர்’ மற்றும் ‘உள்ளடக்க எழுத்தாளர்’ என இரண்டு ஏஜெண்டுகள் தேவை. அவர்களுக்கு 2026-ன் லேட்டஸ்ட் ட்ரெண்டுகளை ஆராய்ந்து சமூக வலைதள பதிவுகளை உருவாக்க சொன்னால், அவர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டு அந்த வேலையை மிக கச்சிதமாக முடிப்பார்கள்.


இறுதியாக, கூகுள் சர்ச் மற்றும் நோஷன் போன்ற கருவிகளை இவர்களுடன் இணைப்பதன் மூலம் ஒரு முழுமையான மார்க்கெட்டிங் பிளான் உங்கள் கையில் இருக்கும். ஒரு மனிதர் 5 மணி நேரம் செய்யும் வேலையை, இந்த ஏஜெண்ட் குழு வெறும் 5 நிமிடங்களில் முடித்துவிடும் என்பது இதன் தனிச்சிறப்பு. எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை மாற்றி அமைக்கப்போகும் இந்த CrewAI தொழில்நுட்பத்தை நோக்கி உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் 60% நிறுவனங்கள் ஏற்கனவே நகர தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Seedance 2.0 AI: 7 வருஷம் படிச்ச படிப்பை 7 நிமிஷத்துல காலி பண்ணிருச்சு இந்த Seedance 2.0 AI. இனி கேமரா இல்லாமலே ஹாலிவுட் ஆடும், டைரக்டர் இல்லாமலே தியேட்டர் அதிரும்!