Fliki AI : ஒரு லிங்க் கொடுத்தால் போதும், வீடியோ ரெடியாகிவிடும்.. எடிட்டிங் தெரியல, கேமரா இல்லன்னு கவலைப்பட வேண்டாம்.. எல்லாமே Fliki AI பார்த்துக்கிடும்!


தற்போதைய டிஜிட்டல் உலகில், ஒரு தகவலை வெறும் உரைநடையாக வாசிப்பதை விட, அதை ஒரு ஆடியோ அல்லது வீடியோவாக பார்ப்பதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். வீடியோக்கள் மூலம் பகிரப்படும் கருத்துக்கள் மக்களின் மனதில் ஆழமாக பதிவதோடு, எளிதில் புரியவும் செய்கின்றன. முன்பெல்லாம் ஒரு வீடியோவை உருவாக்க கேமரா, விளக்குகள், மைக் என பெரிய உபகரணங்கள் தேவைப்பட்டன. ஆனால், இன்று AI தொழில்நுட்பம் அந்த வேலையை ஒரு சில நிமிடங்களில் முடித்துவிடுகிறது.


அந்த வகையில், Fliki என்ற AI கருவி வீடியோ கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நீங்கள் ஒரு பிளாக் எழுத்தாளராக இருந்தால் உங்கள் கட்டுரையின் இணைப்பையோ, அல்லது ஒரு பவர்பாயிண்ட் கோப்பையோ அல்லது அமேசான் போன்ற தளங்களின் தயாரிப்பு இணைப்பையோ கொடுத்தால் போதும். Fliki தானாகவே அதை புரிந்துகொண்டு, பொருத்தமான காட்சிகளுடன் ஒரு தரமான வீடியோவை நொடிகளில் உருவாக்கி தந்துவிடும்.


இந்த கருவியின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் கேமரா முன் நிற்க வேண்டிய அவசியமில்லை. இதில் தமிழ் உட்பட 80-க்கும் மேற்பட்ட மொழிகளில், 2500-க்கும் மேற்பட்ட ஏஐ குரல்கள் உள்ளன. இவை வெறும் இயந்திரக் குரல் போலன்றி, மனிதர்கள் பேசுவது போன்ற தத்ரூபமான உணர்வை தருகின்றன. உங்களது ஸ்கிரிப்ட்டிற்கு ஏற்ற உணர்ச்சிகளுடன் கூடிய குரலை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.


மேலும், Fliki தளத்தில் 70-க்கும் மேற்பட்ட ஏஐ அவதார்கள் உள்ளன. இவை ஒரு நபர் நேரில் நின்று பேசுவது போன்ற தோற்றத்தை உங்கள் வீடியோக்களுக்கு வழங்கும். இன்னும் ஒரு படி மேலே போய், உங்கள் சொந்த குரலையே குளோனிங் செய்யும் வசதியும் இதில் உண்டு. இதன் மூலம் உங்கள் வீடியோக்கள் மிகவும் தனித்துவமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும்.


கல்வித்துறை, மார்க்கெட்டிங் மற்றும் நிறுவனங்களின் உள்நாட்டு தொடர்புகளுக்கு இந்த Fliki ஏஐ கருவி ஒரு சிறந்த கருவியாகும். வீடியோ எடிட்டிங் குறித்த எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமலேயே, உயர்தரமான வீடியோக்களை மிகக்குறைந்த செலவிலும் நேரத்திலும் உருவாக்க இது வழிவகை செய்கிறது. எந்தவிதமான விலையுயர்ந்த மென்பொருட்களும் இன்றி, ஒரு சாதாரண இணைய இணைப்பு இருந்தால் போதுமானது.


இந்த சேவையை நீங்கள் இலவசமாகவே தொடங்கி பார்க்கலாம். கிரெடிட் கார்டு விவரங்கள் இன்றி உங்கள் கற்பனை திறனுக்கு உயிர் கொடுக்க Fliki ஒரு சிறந்த தளம். டிஜிட்டல் யுகத்தில் நீங்களும் ஒரு சிறந்த வீடியோ கிரியேட்டராக மாற இதுவே சரியான வாய்ப்பு. இந்த ஏஐ கருவியை பயன்படுத்திய உங்கள் அனுபவம் எப்படியிருந்தது என்பதை கமெண்ட் பாக்ஸில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!


மத்தவன் மெட்டை காப்பி அடிக்கிறது திருட்டு… ஆனா SOUNDRAW AIயில் புது ராகம் போடுறது ஒரு தனி ரூட்டு! இது 100% உங்களுக்கான சொந்தப் பாட்டு!