AI தொழில்நுட்பம் இன்று கல்வி, மருத்துவம், சட்டம் என அனைத்த் துறைகளிலும் ஊடுருவி, மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், எழுத்து துறையிலும் AI தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக, நாம் எழுதும் ஒரு ஆய்வுக் கட்டுரையோ, அலுவலக மின்னஞ்சலோ அல்லது சமூக வலைதள பதிவோ அது இலக்கண பிழைகளுடன் இருந்தால், அது நமது நற்பெயரை கெடுத்துவிடும். இத்தகைய சூழலில், உங்கள் எழுத்தை மெருகேற்றி, பிழைகளின்றி நேர்த்தியாக மாற்ற உதவும் ஒரு மிகச்சிறந்த ஏஐ கருவிதான் Grammarly.
இது வெறும் இலக்கண திருத்தக் கருவியாக மட்டும் செயல்படாமல், உங்கள் எழுத்தின் பாணியை மாற்றியமைக்கும் ஒரு தேர்ந்த உதவியாளராகவும் இருக்கிறது. நாம் எழுதும் வாக்கியங்களின் தொனியை மிகவும் அழகாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இது மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக, “நமது நிறுவனம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று நீங்கள் எழுதினால், அதற்கு பதிலாக “நமது நிறுவனம் ஒரு சிறந்த கூட்டணியாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என இது மாற்றியமைக்கும். இது படிப்பவர்களுக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்குவதோடு, உங்கள் தனித்துவத்தை இழக்காமல் வாக்கியத்தை வலிமையாக்கும்.
நீங்கள் சாதாரண மக்களுக்காக எழுதுகிறீர்களா அல்லது ஒரு நிபுணருக்காக எழுதுகிறீர்களா என்பதை தீர்மானித்து, அதற்கேற்ப ஆலோசனைகளை Grammarly இடம் பெற முடியும். ஜிமெயில், கூகுள் டாக்ஸ், லிங்க்டு-இன் போன்ற தளங்கள் அல்லது பிளாக் எழுதுவது என பல இடங்களிலும் Grammarly உங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இலக்கணத்தை தாண்டி, உங்கள் எழுத்தை ஒரு வேலைக்கான விளம்பரமாகவோ அல்லது சமூக வலைதள குறிப்புகளாகவோ மாற்றவும் இது பெரிதும் உதவுகிறது.
இந்த AI கருவியின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு கட்டுரை மனிதனால் எழுதப்பட்டதா, காப்பி பேஸ்ட் செய்யப்பட்டதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை இது துல்லியமாக திரையிட்டுக் காட்டும். Grammarly இலவச திட்டத்தில் மாதத்திற்கு 100 ஏஐ Prompts மட்டுமே கிடைக்கும் என்பதால், பெரிய கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு இது சற்றே குறைவாக இருக்கலாம். அதேபோல், இது முழுமையாக இணைய வசதி மற்றும் பிரவுசர் சார்ந்து இயங்கும் கருவி என்பதால், ஆஃப்லைனில் இதை பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இலக்கணத் திருத்தங்களை தாண்டி, புதிய யோசனைகளை உருவாக்கவும், கருத்துக்களை ஒருங்கமைக்கவும் இதில் உள்ள Increase Impact என்ற அம்சம் உதவுகிறது. எண்கள் மற்றும் தேதிகளை சேர்த்து உங்கள் எழுத்தை இன்னும் வலுவானதாக மாற்றுவதுடன், சமூக வலைதளங்களுக்கு ஏற்ற எமோஜிகள் மற்றும் ஹேஷ்டேக்குகளையும் இதுவே பரிந்துரை செய்யும். குறிப்பாக கூகுள் டாக்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Authorship அம்சம், எழுத்தாளர்களுக்கு தங்களின் எழுத்துரிமையை நிலைநாட்டப் பெரும் உதவியாக இருக்கும்.
மைக்ரோசாஃப்ட் வேர்டு, அவுட்லுக், குரோம் மற்றும் மொபைல் ஆப் என அனைத்து தளங்களிலும் கிராமர்லி தடையின்றி கிடைக்கிறது. மொபைலில் பயன்படுத்தும் போது Voice Commands மூலமாகவே நீங்கள் வேலை செய்யலாம். உங்கள் கைகளை தொடாமலேயே பிழையற்ற எழுத்துக்களை உருவாக்க முடியும். மொத்தத்தில், உங்கள் எழுத்து பணியின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்த விரும்பினால், Grammarly ஒரு தவிர்க்க முடியாத நவீன கருவியாகும்.
