Hello Frank AI : பிசினஸ்ல ஜெயிக்கிறதுக்கு அதிர்ஷ்டம் தேவையில்லை… சரியான நேரத்துல சரியான ‘டேட்டா தான் ! Hello Frank AI உதவியால் வளர்ச்சியை தொடங்குங்குகள்

 


வளரும் நிறுவனங்களின் நிறுவனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில், தங்களது பணப்புழக்கத்தை துல்லியமாக கண்காணிப்பதுதான். பழைய கணக்கு வழக்குகளை வைத்துக்கொண்டு வருங்காலத்திற்கான முடிவுகளை எடுப்பது ஒருபோதும் வெற்றியை தராது. இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு AI டூல் தான் Hello Frank AI. இது ஒரு முழுமையான தானியங்கி நிதி ஆலோசகராக செயல்படுகிறது. இது வெறும் தரவுகளை மட்டும் தராமல், அந்த தரவுகள் சொல்லும் உண்மையான நிலையை நிறுவனர்களுக்கு புரிய வைக்கிறது. இதன் மூலம் நிதி சார்ந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான இலக்கை நோக்கி நிறுவனங்கள் பயணம் செய்ய முடியும்.


பிசினஸ் பிளாட்பார்ம்களின் இணைப்பு


வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கும் உங்கள் வணிக தரவுகளை ஒன்றிணைப்பதுதான் இந்த Hello Frank AI தளத்தின் முதல் வேலை. உங்களது வங்கி தரவுகள், விற்பனை புள்ளிவிவரங்கள் , மற்றும் கணக்குப்பதிவு மென்பொருள்கள் ஆகியவற்றைச் சில நிமிடங்களில் இதனுடன் இணைக்கலாம். இது உங்கள் நிறுவனத்தின் அனைத்து நிதி தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டி, ஒரு ‘முழுமையான உண்மை தளத்தை’ உருவாக்குகிறது. இதனால் ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக தேடும் வேலை மிச்சமாக்குகிறது.


சிக்கலான எண்கள் இனி எளிய வரைபடங்கள்


நிதி அறிக்கைகள் என்றாலே பலருக்கும் தலைவலி தரும் விஷயம். ஆனால், Hello Frank AI அந்தச் சிக்கலான எண்களை கண்ணை கவரும் எளிய வரைபடங்களாகவும் , முக்கிய வணிகக் குறியீடுகளாகவும் மாற்றுகிறது. நிறுவனத்தின் Burn Rate மற்றும் வருவாய் வளர்ச்சி போன்றவற்றை தத்ரூபமாக படம் பிடித்து காட்டுவதால், நிதி நிலையை புரிந்துகொள்ள நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை.


வருங்காலத்தைக் கணிக்கும் தொழில்நுட்பம்


ஒரு புதிய பணியாளரை சேர்த்தால் நிறுவனத்தின் நிதி நிலையில் என்ன மாற்றம் ஏற்படும்? அல்லது விளம்பர செலவை அதிகரித்தால் லாபம் எவ்வளவு உயரும்? போன்ற கேள்விகளுக்கு ‘உடனடி விடை’ அளிக்கிறது இந்த Hello Frank AI. உங்களது தற்போதைய தரவுகளை வைத்து வருங்கால நிதியை கணித்து சொல்வதால் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் தயங்க வேண்டிய அவசியமில்லை. “இப்படி செய்தால் என்னவாகும்?” என்ற பயத்தை நீக்கி, “இதை செய்யலாம் அல்லது இதை செய்ய கூடாது என்ற அறிவுரையை இது நிறுவனர்களுக்கு வழங்குகிறது.


பாதுகாப்பும் வேகமும் இணைந்த மேலாண்மை


வணிகத் தரவுகள் என்பவை மிகவும் ரகசியமானவை. Hello Frank AI தனது பயனர்களின் தரவு பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது. Encryption மூலம் உங்களது தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில், தரவுகளை பகுப்பாய்வு செய்யும் வேகம் வியக்கத்தக்க வகையில் இருப்பதால், உடனுக்குடன் முடிவுகளை எடுக்க முடிகிறது. நேரத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், மனிதத் தவறுகளையும் இது பெருமளவில் குறைக்கிறது. இது வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பான கவசமாகச் செயல்படுகிறது.


மொத்தத்தில் Hello Frank AI என்பது வெறும் மென்பொருள் அல்ல; அது நிறுவனர்களின் வெற்றிக்கான ஒரு டிஜிட்டல் ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.


SocialSweep AI: கூகுள்ல தேடுனா உலகமே வரும்… ஆனா SocialSweepல தேடுனா தேவையான வாய்ப்பு உங்களை தேடி வரும்!