ClickUp Brain AI: வெறும் டேஷ்போர்டு இல்ல… உங்க ஆபீஸ்ல இருக்கிற எல்லா வேலையையும் விரல் நுனியில கொண்டு வர்ற ‘டிஜிட்டல் மூளை’!

click brain ai

AI தொழில்நுட்பம் இன்று ஒரு தங்க சுரங்கத்தை போல அள்ள அள்ள குறையாத ஆச்சரியமான தகவல்களை வழங்கி கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அலுவலக பணிகளை புரட்டி போட வந்துள்ள ஒரு மிகச்சிறந்த ‘ஆல்-இன்-ஒன்’ தீர்வுதான் ClickUp Brain. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விரிவான அலசல் இதோ:


எளிமையான தொடக்கம் மற்றும் பயன்பாடு


ClickUp Brainஐ பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் அலுவலக பணி சூழலின் போது, திரையின் வலது கீழ் மூலையில் உள்ள AI Chatbot ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இதன் சேவையை பெறத் தொடங்கலாம். இதில் ஏற்கனவே உள்ள டெம்ப்லேட் Promptsகளை பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் கேட்டுத் தெளிவு பெறலாம்.


மற்ற செயலிகளுடன் ஒருங்கினைப்பு


ClickUp Brain-இன் மிகப்பெரிய பலம் என்பது, இது மற்ற செயலிகளுடன் இணைந்து செயல்படும் திறனை கொண்டதுதான். குறிப்பாக, இதில் உள்ள Apps வசதியை தேர்வு செய்தால், Google Drive, Jira, Figma போன்ற பல்வேறு செயலிகளை இதனுடன் இணைக்கலாம். இதன் மூலம் கிளிக்அப் தளத்தை விட்டு வெளியேறாமலேயே, மற்ற செயலிகளில் உள்ள தகவல்களை தேடவோ அல்லது தேவையான விவரங்களை பெறவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


புத்திசாலித்தனமான ஆட்டோமேஷன்


தினசரி வேலைகளை தானியக்கமாக்க ClickUp Brainஐ ஒரு புத்திசாலித்தனமான உதவியாளராக பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு புதிய பணி வரும்போது “அதை உடனடியாக எனக்கு அசைன் செய்” என்று நீங்கள் கட்டளையிட்டால் போதும், ClickUp Brain தானாகவே அதற்கான ஆட்டோமேஷன் விதியை உருவாக்கிவிடும். இது சிக்கலான வேலைகளை கூட மிக எளிய நிலைகளாக பிரிக்க உதவுவதோடு, ஒரு பெரிய திட்டத்தின் பெயரை மட்டும் கொடுத்தால் அதற்கான துணை பணிகளையும் பட்டியலிட்டுவிடும்.


நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ தீர்வு


இன்றைய உங்களின் பணிகள் என்னென்ன என்பதை சில நொடிகளில் பட்டியலிட்டு, ஒவ்வொன்றையும் ஆழமாக சென்று தேட வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. மீட்டிங் உள்ளிட்டவற்றிற்கான நிகழ்ச்சி நிரல்கள் , தயாரிப்பு விவரங்கள் மற்றும் SOP ஆகியவற்றை உருவாக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும், நீண்ட ஆவணங்கள் அல்லது குழு உரையாடல்களை விரைவாக பகுப்பாய்வு செய்து, முக்கியமான தகவல்களை மட்டும் சுருக்கி கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை சேமிக்கிறது.


பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்


ClickUp Brain என்பது GDPR மற்றும் SOC 2 தர சான்றிதழ்களை பெற்றுள்ளதால், இது மிகவும் பாதுகாப்பானது. இது ChatGPT தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இதில் ஆவணங்களை நேரடியாக அப்லோடு செய்ய முடியாது என்றாலும், ClickUp Brain மென்பொருளுக்குள் இருக்கும் ஆவணங்களை இது மிகச்சிறப்பாக கையாளுகிறது. இதன் சந்தா விலை இந்திய மதிப்பில் மாதம் சுமார் 415 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.


நிறை குறைகள் மற்றும் முடிவு


எல்லா தொழில்நுட்பங்களை போலவும் இதிலும் ஒரு சிறு குறை உள்ளது. தற்போது கஸ்டம் டேஷ்போர்டுகளில் ஏஐ வசதி வழங்கப்படவில்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ClickUp Brainஐ சரியாக பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உற்பத்தி திறனை இரண்டு மடங்கு அதிகரிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சமாகும்.


Wisprflow.AI: டைப் பண்றது பழைய ஸ்டைல்… பேசுறதுதான் Wisprflow.ai ஸ்டைல்! ஆபீஸ்ல நீங்க ‘பாஸ்’ மாதிரி பேசிட்டே வேலையை முடிக்கலாம்!