Lexis+ AI: வழக்கு எவ்வளவு பெரியதா இருந்தாலும் பரவாயில்லை… அதோட மொத்த கதையையும் ஒரு செகண்ட்ல சுருக்கி கொடுத்துடும்! இது வெறும் ஏஐ இல்லை, வழக்கறிஞர்களோட ‘டிஜிட்டல் ஜூனியர்’!




AI தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், ஒரு சில துறைகளில் இதற்கான கருவிகள் குறைவாகவே உள்ளன. அந்த வகையில் சட்டத்துறைக்கு என பிரத்யேகமாக வெளியாகி உள்ள மிகச்சிறந்த கருவிதான் Lexis+ AI. வேகமான இந்த உலகில், சட்ட வல்லுநர்கள் மிக துல்லியமான தகவல்களை கண்டறிந்து நீதிமன்றத்தில் வாதாடுவது அவசியமாகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த AI டூல், வழக்கறிஞர்களுக்கு ஒரு நம்பகமான சட்ட ஆராய்ச்சி உதவியாளராக செயல்படுகிறது.


துல்லியமான ஆராய்ச்சியும் உடனடி பதில்களும்


Lexis+ AI என்பது சட்ட ஆவணங்களை உருவாக்குதல், ஆராய்ச்சி செய்தல் மற்றும் சட்ட நுணுக்கங்களை பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது லெக்ஸிஸ் நெக்ஸிஸின் அதிகாரப்பூர்வமான சட்டத்தரவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவதால், வழக்கறிஞர்கள் கேட்கும் மிகவும் கடினமான கேள்விகளுக்கு கூட ஒரு சில வினாடிகளிலேயே சரியான பதில்களை வழங்குகிறது. இதன் மூலம் வழக்கறிஞர்கள் தங்களின் வழக்குகளுக்கு தேவையான சட்டக்குறிப்புகளை மிக எளிதாகவும் வேகமாகவும் பெற்றுக்கொள்ள முடிகிறது.


சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதில் எளிமை


நீதிமன்ற மனுக்கள் , புகார்கள் மற்றும் பரிவர்த்தனை ஆவணங்கள் போன்ற முழுமையான சட்ட ஆவணங்களை தயாரிப்பது இந்த கருவியின் மூலம் மிகவும் எளிதாகிறது. பயனர்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து, ஆவணங்களை மீண்டும் மீண்டும் மெருகேற்றி கொள்ளும் வசதியும் இதில் உண்டு. இது வெறும் ஆவணங்களை மட்டும் உருவாக்காமல், வழக்கின் போக்கை மாற்றக்கூடிய முக்கியமான சட்ட ஆதாரங்களையும் தேடி தருகிறது.


நிறுவன தரவுத்தளமும் உலகளாவிய ஆதாரங்களும்


ஒரு சட்ட நிறுவனம் சிறப்பாக செயல்பட Lexis+ AI ஒரு தூணாக அமைகிறது. இதில் உள்ள ‘இன்டெர்னல் டேட்டாபேஸ்’ மற்றும் உலகத்தரம் வாய்ந்த சட்ட ஆதாரங்கள் மூலம், ஒரு நிறுவனத்தின் முந்தைய வழக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய சட்ட விதிகளின் அடிப்படையில் மிகச்சிறந்த நுண்ணறிவுகளை பெற முடியும். இதனால் வழக்கறிஞர்கள் மிக ஆழமான ஆராய்ச்சிகளை செய்து, வழக்குகளை வலிமையாக நீதிமன்றத்தில் முன்வைக்க முடிகிறது.


நேர மேலாண்மை மற்றும் ஜுனியர் வக்கீல் பணி


வழக்கறிஞர்களின் வேலைப்பளுவை குறைப்பதில் இந்த Lexis+ AI முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே இடத்தில் அனைத்து சட்டப்பணிகளையும் முடிக்க முடிவதால், வழக்கறிஞர்களால் அதிக வாடிக்கையாளர்களின் வழக்குகளை எடுத்துக்கொள்ள முடிகிறது. எளிமையாக சொன்னால், ஒரு ஜுனியர் வக்கீல் பக்கத்தில் இருந்து குறிப்புகளை எடுத்து கொடுப்பது போல, இந்த ஏஐ மாடல் சட்ட வல்லுநர்களுக்கு ஒரு சிறந்த உதவியாளராக எப்போதும் துணை நிற்கிறது.


தரவு பாதுகாப்பும் மனித மேற்பார்வையும்


சட்டத்துறையில் தரவு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் Lexis+ AI, பயனர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் பகிராத ‘பிரைவேட் மல்டி-மாடல்’ அணுகுமுறையை பின்பற்றுகிறது. மனித மேற்பார்வையுடன் கூடிய இந்த தொழில்நுட்பம், மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் போன்ற பாதுகாப்பான கட்டமைப்புகளில் செயல்படுவதால், வழக்கறிஞர்கள் தங்களின் ரகசிய தரவுகளை தைரியமாக பாதுகாக்க முடியும்.


SocialSweep AI: கூகுள்ல தேடுனா உலகமே வரும்… ஆனா SocialSweepல தேடுனா தேவையான வாய்ப்பு உங்களை தேடி வரும்!