Looka AI : ஆயிரம் வார்த்தை சொல்ல முடியாததை ஒரு சின்ன லோகோ சொல்லும்… அந்த லோகோவை ஆளுமையோட உருவாக்குறதுல Looka AI தான் கெத்து!

 


ஒரு புதிய தொழிலை தொடங்கும்போது, அதற்கு பொருத்தமான லோகோ மற்றும் பிராண்ட் அடையாளத்தை உருவாக்குவது சவாலான காரியம். ஆனால், Looka என்ற AI தளம், கிராபிக் டிசைன் அறிவு ஏதுமில்லாமல் ஒரு சில நிமிடங்களில் ஒரு புரொபஷனல் பிராண்டை உருவாக்க உங்களுக்கு உதவி செய்யும். உங்கள் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்தால் போதும், அடுத்த சில நொடிகளில் AI தொழில்நுட்பம் உங்கள் ரசனைக்கு ஏற்ற நூற்றுக்கணக்கான லோகோக்களை உடனுக்குடன் வடிவமைத்து கொடுக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.


நிமிடங்களில் தனித்துவமான லோகோ:


பொதுவான எல்லோரும் வடிவமைக்கும் மாடல்களில் லோகோக்களை உருவாக்குவதை தவிர்த்து, உங்கள் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ற வடிவமைப்புகளை Looka வழங்குகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்படும் இந்த லோகோக்களில் நீங்கள் விரும்பும் வண்ணங்கள், குறியீடுகள் மற்றும் அளவுகளை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். மேலும், உங்கள் Looka டி-சர்ட், பேனா அல்லது விசிட்டிங் கார்டுகளில் எப்படி இருக்கும் என்பதையும் Mockup மூலம் நேரடியாக பார்க்கலாம்.


பிராண்ட் கிட் :


லோகோ மட்டும் போதாது, ஒரு பிராண்டிற்கு தனித்துவமான அடையாளம் தேவை. Lookaவின் ‘பிராண்ட் கிட்’, நீங்கள் தேர்ந்தெடுத்த லோகோ, வண்ணங்கள் மற்றும் எழுத்துருக்களை பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான மார்க்கெட்டிங் மெட்டீரியல்களை நொடியில் உருவாக்குகிறது. இதில் இன்வாய்ஸ்கள், ஃபிளையர்கள் மற்றும் மின்னஞ்சல் கையொப்பங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.


சமூக ஊடகங்களுக்கான தயார்நிலை:


யுடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக தளங்களுக்கு தேவையான ‘புரொஃபைல்’ மற்றும் ‘கவர்’ போட்டோக்களை Looka தானாகவே சரியான அளவில் மாற்றி தருகிறது. இது தவிர, சமூக வலைதள பதிவுகள் மற்றும் ஸ்டோரிக்களுக்கான வடிவமைப்புகளையும் நீங்கள் எளிதாக உருவாக்கலாம். 300க்கும் மேற்பட்ட டெம்ப்ளேட்கள் உங்கள் பிராண்ட் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


உயர்தர கோப்புகள் :


உங்கள் லோகோவை இறுதி செய்த பிறகு, அதை SVG, PNG, EPS மற்றும் PDF போன்ற 15-க்கும் மேற்பட்ட கோப்பு வடிவங்களில் பதிவிறக்கம் செய்யலாம். இவை வெளிப்படையான பின்னணி, கருப்பு-வெள்ளை, மற்றும் வண்ணங்களில் கிடைக்கும். இதனால் ஆன்லைன் மட்டுமின்றி, பிரிண்டிங் வேலைகளுக்கும் தரமான கோப்புகளை பயன்படுத்த முடியும்.


வணிக அட்டைகள்


Lookaவின் பிராண்ட் கிட் மூலம் 20-க்கும் மேற்பட்ட புரொபஷனல் டெம்ப்ளேட்களை பயன்படுத்தி உங்கள் விசிட்டிங் கார்டுகளை வடிவமைக்கலாம். இவற்றை தயார் செய்தவுடன் நேரடியாக எந்தவொரு பிரிண்டிங் நிறுவனத்திற்கும் அனுப்பி அச்சிட முடியும். உங்கள் பிராண்ட் எங்கு சென்றாலும் ஒரு சீரான தோற்றத்தை கொண்டிருப்பதை இது உறுதி செய்கிறது.


மொத்தத்தில் Looka என்பது வெறும் லோகோ மேக்கர் மட்டுமல்ல, அது உங்கள் சொந்த டிசைனர். உங்கள் தொழிலை வளர்க்க ஒரு அழகான பிராண்டை உருவாக்கி, முதல் நாளிலிருந்தே ஒரு பெரிய நிறுவனம் போன்ற தோற்றத்தை பெற Looka ஒரு மிகச்சிறந்த தேர்வாகும்.