Ocoya AI : விளம்பர ஏஜென்சிக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணாதீங்க… குறைந்த செலவு உங்கள் பிராண்ட் உலகம் முழுவதும் பிரபலமாகும்.. அதுதான் Ocoya AI மேஜிக்..!



ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு விளம்பர ஏஜென்சிகளை நாடி, பெரும் தொகையை செலவழிக்கும் காலம் மெல்ல மறைந்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதே குறைந்த செலவில் அதிக லாபத்தை தருகிறது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பதற்கென பெரும் நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த சவாலை முறியடிக்கவே Ocoya AI தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. உங்கள் பிராண்டை டிஜிட்டல் உலகில் நிலைநிறுத்த இந்த நவீன AI தளங்கள் ஒரு சிறந்த உதவியாளராகச் செயல்படுகின்றன.


தானியங்கி கன்டென்ட் உருவாக்கம்


இந்த Ocoya தளம் உங்களுக்காக பல வேலைகளை தானாகவே செய்யும் திறன் கொண்டது. உங்கள் பிராண்டின் தன்மைக்கு ஏற்ப, கவர்ச்சிகரமான சமூக வலைதள பதிவுகளை இதுவே உருவாக்கும். அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் அனுப்பும் நேரடி செய்திகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளிப்பது மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கு தானாகவே லிங்குகளை அனுப்புவது போன்ற பணிகளையும் இது கவனித்துக் கொள்கிறது. இதனால் மனித உழைப்பு குறைவதோடு, 24 மணிநேரமும் உங்கள் பிராண்ட் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்யலாம்.


நேரத்தை மிச்சப்படுத்தும் ஆட்டோமேஷன்


ஒவ்வொரு முறையும் கணினி முன் அமர்ந்து பதிவுகளை உருவாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதில் உள்ள விதிகளை ஒருமுறை மட்டும் அமைத்துவிட்டால் போதும்; இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தானாகவே பதிவுகளை இது வெளியிட்டுக்கொண்டே இருக்கும். உங்கள் பிளாக் அல்லது இணையதளத்தில் புதிய கட்டுரை வெளியானால், அது தானாகவே ஒரு சமூக ஊடக பதிவாக மாறிவிடும். இதன் மூலம் உங்கள் ஆன்லைன் இருப்பு எவ்வித தடங்கலும் இன்றி தொடரும்.


இ-காமர்ஸ் மற்றும் வணிக ஒருங்கிணைப்பு


இ-காமர்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். உங்கள் ஆன்லைன் கடையில் ஒரு புதிய பொருளை சேர்த்தால், Ocoya தானாகவே அதை பற்றிய விளம்பர பதிவுகளைத் தயார் செய்துவிடும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தளங்களுடன் இது இணைந்து செயல்படுகிறது.


நம்பகமான அப்ரூவல் சிஸ்டம்


விளம்பர ஏஜென்சி நடத்துபவர்களுக்கும், பெரிய குழுக்களுக்கும் இதன் ‘அப்ரூவல் சிஸ்டம்’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Ocoya உருவாக்கிய பதிவுகள் நேரடியாக வெளியாகாமல், உங்கள் குழுவினர் அல்லது வாடிக்கையாளர்கள் சரிபார்த்து அனுமதி அளித்த பின்னரே இணையத்தில் வெளியாகும். இது வேலையில் நம்பகத்தன்மையையும், பிராண்ட் தரத்தையும் நேர்த்தியாக உறுதி செய்கிறது. ஒரு பதிவின் தரம் மற்றும் அதில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்பே அது பொதுவெளியில் பகிரப்படும்.


அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்


இந்த Ocoya சேவை பல்வேறு பட்ஜெட்டுகளில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. தனிநபர்களுக்கான அடிப்படைத் திட்டம் மாதம் வெறும் 15 டாலர் முதல் தொடங்குகிறது. பெரிய நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட ‘டைமண்ட் பிளான்’ வரை பல தேர்வுகள் இதில் உள்ளன. உங்கள் வணிகத்தின் தேவைக்கு ஏற்ப ஒரு திட்டத்தைத் தேர்வு செய்து, Ocoya உதவியுடன் சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.