முன்பெல்லாம் ஒரு புதிய App உருவாக்க வேண்டும் என்றால், ஒரு App டெவலப்பரிடம் நமது ஐடியாவை சொல்ல வேண்டும். அவர் அந்த ஐடியாவை செயல்படுத்த சில நாட்களோ அல்லது வாரங்களோ எடுத்து கொள்வார். அதன் பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும் கூட, அதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு சில நிமிடங்களிலேயே, App டெவலப்பர் உதவி இல்லாமலேயே ஒரு App நீங்களே உருவாக்கிவிட முடியும். அந்த வகையில் Replit தளம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எளிமையான அணுகுமுறை மற்றும் கோடிங் வசதி
Replit மூலம் ஒரு ஐடியாவை செயலியாக மாற்றுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த டெவலப்பராக இருந்தாலும் சரி, அல்லது கோடிங் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருந்தாலும் சரி, செயலியை உருவாக்குவதற்கு இதுவே மிகச்சிறந்த தளம். இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், எந்தவித மென்பொருளையும் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்யவோ அல்லது செட்-அப் செய்யவோ தேவையில்லை; நேரடியாக பிரவுசரிலேயே அனைத்தையும் செய்துவிடலாம்.
Replit ஏஜென்ட்: உங்கள் ஐடியாவுக்கு உயிர் கொடுக்கும் கருவி
இயல்பான மனித மொழியில் உங்கள் தேவைகளை கூறினாலே, அது உங்களுக்கான கோடிங்கை செய்து தரும். இதில் உள்ள ‘ஏஐ நேட்டிவ்’ கருவிகள் மற்றும் ‘Replit Agent ஆகியவற்றின் உதவியால், ஒரு ஒற்றை வரி Prompt மூலம் உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுக்க முடியும். (Database, ஸ்டோரேஜ் மற்றும் ரகசிய தரவுகளை பாதுகாத்தல் போன்ற கடினமான வேலைகளை Replit மிகவும் எளிதாக கவனித்துக் கொள்கிறது.
ஒரே கிளிக்கில் உலகிற்கு அறிமுகம்
நீங்கள் உருவாக்கிய செயலி உங்களுக்கு திருப்தி அளித்தவுடன், Replit Deployment மூலம் அதனை இணையத்தில் நேரலையாக வெளியிட முடியும். ஒரு சில கிளிக்குகளிலேயே உங்கள் படைப்பை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் இது மாற்றுகிறது. மேலும், Replitன் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் மொபைல் Replit மூலம் கணினியில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் உங்கள் ஸ்மார்ட்போனிலேயே செய்ய முடியும் என்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
செயலியை உருவாக்கும் வழிமுறைகள்
Replit மூலம் ஒரு செயலியை உருவாக்குவது மிகவும் எளிது. முதலில் replit.com என்ற தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘ரெப்லிட் ஏஜென்ட்’ என்பதை தேர்வு செய்து, உங்களுக்கு தேவையானதைச் சாதாரண ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். உதாரணமாக, “Create a simple To-Do List app with a dark theme and weather widget” என்று கூறினால் போதும், அது உடனே கோடிங் எழுத தொடங்கிவிடும்.
தரவு மேலாண்மை மற்றும் வெளியீடு
உங்கள் செயலிக்கு தரவுகளை சேமிக்க வேண்டும் என்றால், இதிலுள்ள ‘Secret’ மற்றும் ‘Database’ ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். இதற்காக தனியாக டேட்டாபேஸ் செட்-அப் செய்ய வேண்டிய அவசியமில்லை, Replit தானாகவே அதை கவனித்துக் கொள்ளும். உங்கள் செயலி முழுமையாக தயாரானதும், மேல் வலது மூலையில் உள்ள ‘Deploy’ பட்டனை அழுத்தினால், ஒரு சில வினாடிகளில் உங்கள் செயலி ஒரு இணையதள முகவரியுடன் உலகிற்கு தயாராகிவிடும்.
