Revio AI: வெறும் லைக், ஷேர், கமெண்ட் மட்டும் போதாது.. சமூக வலைத்தளம் மூலம் பிசினஸை டெவலப் பண்ணனும்.. அதுக்கு உதவும் AI தான் Revio




சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காகவும், நட்பை பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அவை வருமானத்தை பெருக்கும் களமாகவும், விளம்பரங்கள் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் தளங்களாகவும் உருவெடுத்துள்ளன. இந்த டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் வழியாக வருமானத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்த வந்துள்ளது Revio எனும் AI கருவி. இது உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை ஒரு சக்திவாய்ந்த விற்பனை மையமாக மாற்றுகிறது.


படைப்பாளர்கள் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்


இன்று பல தொழிலதிபர்களும், சமூக ஊடக படைப்பாளர்களும் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல், தங்களை பின்தொடரும் நூற்றுக்கணக்கான நபர்களில் உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதைக் கண்டறிவதே ஆகும். இன்ஸ்டாகிராம் DMs மற்றும் பேஸ்புக் மெசேஞ்சர்களில் குவியும் செய்திகளுக்கு நடுவே, உண்மையான ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை கண்டறிவதற்குள் அவர்கள் நம்மை விட்டு விலகி செல்கின்றனர். இதனால் வாங்க தகுதியற்ற நபர்களுடன் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதன் மூலம் நேரமும் வீணாகிறது, வருமானமும் குறைகிறது.


பாதுகாப்பான முறையில் விற்பனை மேலாண்மை


பொதுவாக, ஒரு நிறுவனத்தின் சமூக ஊடக கணக்குகளை ஊழியர்கள் கையாளும் போது, லாகின் விவரங்களை பகிர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது கணக்கு முடக்கப்படும் அபாயத்தை உருவாக்குகிறது. ஆனால், Revio பயன்படுத்தும் போது, உங்கள் லாகின் விவரங்களை பகிராமலேயே மெசேஜ்களை பாதுகாப்பாக கையாள முடியும். இது உங்கள் சமூக ஊடக கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.


AI மூலம் தானியங்கி உரையாடல் மற்றும் ஆலோசனைகள்


Revio மிகச்சிறந்த அம்சம் அதன் AI கோ-பைலட் ஆகும். உங்கள் முந்தைய வெற்றிகரமான உரையாடல்களை ஆய்வு செய்து, புதிய வாடிக்கையாளர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற ஆலோசனையை இது வழங்கும். நீங்கள் வெறும் Send பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். மேலும், உங்களை பின்தொடர்பவர்களை ஸ்கேன் செய்து, அதில் யார் வாடிக்கையாளராக மாற வாய்ப்புள்ளது என்பதை இந்த Revio AI கண்டறிந்து, அவர்களுக்கு தானாகவே மெசேஜ் அனுப்பி விற்பனை வாய்ப்பை உருவாக்குகிறது.


வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன வசதிகள்


வெறும் எழுத்துப்பூர்வமான மெசேஜ்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களை கவர ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை அனுப்பும் வசதியும் Revioவில் உள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் ஒரு தனிப்பட்ட பிணைப்பை ஏற்படுத்த இது உதவுகிறது. வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்குவதற்கு தேவையான நம்பிக்கையை ஊட்ட வீடியோ காட்சிகள் மற்றும் குரல் செய்திகளை அனுப்புவதன் மூலம் விற்பனை விகிதத்தை எளிதாக உயர்த்த முடிகிறது.


Revio என்பது வெறும் மென்பொருள் மட்டுமல்ல, இது ஒரு சிறந்த விற்பனை பயிற்சியாளராகவும் செயல்படுகிறது. சமூக ஊடகங்களில் வெறும் ‘லைக்குகளை’ மட்டும் வாங்கி கொண்டு நேரத்தை வீணாக்காமல், அதனை ஒரு நிலையான வருமானம் ஈட்டும் தளமாக மாற்ற Revio ஒரு சிறந்த கருவியாகும்.


கோடிங் தெரிஞ்சா மட்டும் போதாது தம்பி… அந்த கோடுக்கு பின்னாடி இருக்கிற AI மூளையும் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் இனிமேல் வேலை கிடைக்கும்..!