இன்றைய டிஜிட்டல் மற்றும் AI உலகில், கடினமான வேலைகளை கூட சுலபமாக்கும் கருவிகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், நமது கற்பனை உருவத்தை ஒரு கலைநயம் மிக்க ‘அவதார்’ போல உருவாக்க ஒரு எளிய வழி கிடைத்துள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் நமக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவது இன்று மிகவும் இன்றியமையாத ஒன்று. அப்போதுதான் கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், தனித்துவமான ஒருவராக நம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும். சாதாரண புகைப்படங்களை பதிவு செய்தால், ‘பத்தோடு பதினொன்றாக’ நாமும் காணாமல் போய்விடுவோம்; ஆனால், நம்மை போன்றே இருக்கும் கார்ட்டூன் அல்லது AI அவதாரங்களை பயன்படுத்தினால் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.
மூன்றே படிகளில் உங்களின் ஏஐ அவதார்:
starrytars என்ற AI செயலி, வெறும் மூன்றே எளிய படிகளில் உங்களுடைய நூற்றுக்கணக்கான தனித்துவமான அவதாரங்களை உருவாக்கித் தருகிறது. AI மூலம் அவதாரை உருவாக்குவது எவ்வளவு எளிது என்பதை இந்த தளம் நமக்கு நிரூபிக்கிறது. முதலில், வெவ்வேறு சூழல்களில் மற்றும் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட உங்களின் 10 முதல் 20 புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும். இதனை அடிப்படையாக கொண்டு, ஏAI ஐ தொழில்நுட்பம் தன்னைத்தானே பயிற்சி அளித்துக் கொண்டு , நூற்றுக்கணக்கான ஸ்டைல்களில் உருவாக்கப்பட்ட அவதார்களை உங்களுக்கு வழங்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.
நேரமும் பணமும் மிச்சம்:
பொதுவாக சில மென்பொருட்களில் அவதாரை உருவாக்குவது என்பது அதிக நேரத்தையும், உழைப்பையும், சில நேரங்களில் பெரும் பண செலவையும் ஏற்படுத்தும். ஆனால், starryai உங்களின் புகைப்படங்களை ஆயிரக்கணக்கான கலை பாணிகளுடன் ஒப்பிட்டு, உங்களுக்கென ஒரு பிரத்தியேகமான அடையாளத்தை உருவாக்கித் தரும். உங்களுக்கு பிடித்த கோணங்கள், வண்ணங்கள் மற்றும் ஸ்டைல்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இதில் உண்டு. இது உங்களின் தனிப்பட்ட கலை ரசனையை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது.
ஸ்டேபிள் டிஃப்யூஷன் தொழில்நுட்பம்:
starryai தளம் Stable Diffusion என்ற நவீன ஏஐ மாதிரியை பின்பற்றுகிறது. இது சுமார் 90,000-க்கும் மேற்பட்ட உயர்ரக புகைப்படங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நுணுக்கமான தொழில்நுட்பமாகும். நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்களை இது மிக துல்லியமாக ஆய்வு செய்யும். அதில் உள்ள நிழல்கள் , டெக்ஸ்ட்சர்கள் மற்றும் மிகச்சிறிய விவரங்களைக் கூட சேர்த்து, ஒரு அற்புதமான கலைப்படைப்பாக மாற்றி கொடுக்கும். இதன் மூலம் கிடைக்கும் படங்கள் நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் இருக்கும்.
டிஜிட்டல் ஆளுமையின் வெளிப்பாடு:
இவ்வாறு உருவாக்கப்பட்ட அவதார்களை நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடலாம் அல்லது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் Profile புகைப்படங்களாக வைக்கலாம். மேலும், இணையதளங்கள் மற்றும் விசிட்டிங் கார்டுகளில் கூட இவற்றை தொழில்முறை ரீதியாக பயன்படுத்தலாம். இவை வெறும் படங்கள் மட்டுமல்ல, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உங்களின் ஆளுமையின் வெளிப்பாடாகும். புதுமையான முறையில் உங்களை உலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.
அனைவருக்கும் இலவசம்:
மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த சேவை இலவசமாக கிடைக்கிறது. இதற்காக நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களின் கற்பனைக்கு உயிர் கொடுக்க starryai ஒரு சிறந்த தளமாகும். நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், இந்த ஏஐ கருவியை பயன்படுத்திய உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
