AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டியுள்ளது. மருத்துவம், சட்டம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் AI, தற்போது இசைத்துறையிலும் புகுந்து விளையாட தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடலை உருவாக்க இசைஞானி இளையராஜா போன்ற ஒரு இசையமைப்பாளரோ அல்லது வரிகளால் ஜாலம் காட்ட கவிப்பேரரசு வைரமுத்து, போன்ற பாடலாசிரியர்களோ கட்டாயம் தேவைப்பட்டனர். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.
இசையமைப்பாளர் இல்லாமலும், பாடலாசிரியர் இல்லாமலும் AI மூலமாகவே முழுமையான பாடல்களை கம்போஸ் செய்வது அடுத்த தலைமுறைக்கான மிகப்பெரிய வசதியாக கருதப்படுகிறது. இணையத்தில் இசையை உருவாக்க ஏராளமான AI டூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றான Suno AI குறித்து விரிவாக பார்ப்போம்.
பாட்டு எழுத தெரியாது, ஆனா பாடணும்னு ஆசையா? கவலையே விடுங்க! சுனோ AI இருக்குறப்போ நீங்களும் ஒரு மியூசிக் டைரக்டர் தான். ‘மெலடி’ வேணுமா இல்ல ‘குத்து பாட்டு’ வேணுமான்னு ஜஸ்ட் ஒரு டெக்ஸ்ட் கொடுத்தா போதும்… அடுத்த செகண்ட் பாட்டு ரெடி! இது வெறும் டெக்னாலஜி மட்டும் இல்ல, எல்லாருக்கும் இசை மேல இருக்குற கனவை நனவாக்குற ஒரு மேஜிக் டூல்!”
ஒரு சாதாரண டெக்ஸ்ட் கொடுத்தால் போதும், அடுத்த சில நொடிகளில் வரிகள், இசை, குரல் என முழுமையான பாடலையே இவை உருவாக்கித் தருகின்றன. இன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கைப் பின்னணி இசையை உருவாக்க இந்த தளங்களையே நாடுகின்றனர்.
Suno AI ரொம்ப “யூசர் பிரண்ட்லி”. ஒரு பாட்டை சட்டென உருவாக்கி தரும் “ஒன்-ஷாட்” ஹிட் ஜெனரேட்டர் இது. பல்லவி, சரணம் என பாடலின் அமைப்பை இது கச்சிதமாக நினைவில் வைத்திருக்கும்.
Suno AI பக்கம் போய், சும்மா ஒரு வரியை தட்டுனா போதும், ‘ஏ ஆர் ரஹ்மான்’ ரேஞ்சுக்கு பாட்டு வந்து நிக்கும். ‘ப்ரோ’ சப்ஸ்கிரிப்ஷன் வச்சிருந்தா அந்த பாட்டை வச்சு நீங்க காசு கூட சம்பாதிக்கலாம், ஓனர்ஷிப் உங்களோடதுதான்!
ஆனா ஒரு சின்ன பஞ்சாயத்து… இந்த ‘யூனிவர்சல்’, ‘சோனி’ மியூசிக் கம்பெனிக்காரங்க எல்லாம் சேர்ந்து ‘எங்க பாட்டை வச்சுதானே உங்க ஏஐ-க்கு டிரெய்னிங் கொடுத்தீங்க’ன்னு கோர்ட்டுக்குப் போயிட்டாங்க. இப்போ 2025 கடைசியில ஒருவழியா பேசி தீர்த்துக்கிட்டாங்க. அதனால இப்போ வர்ற பாட்டுல எல்லாம் ‘வாட்டர்மார்க்’ வச்சு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் பண்ணிட்டாங்க. ஆனா என்னதான் இருந்தாலும், பாட்டு என்னவோ நம்ம ஐடியாவுல வர்றதுதானே… அப்போ நாமளும் ஒரு மியூசிக் டைரக்டர் தான் பாஸ்!”
Suno-வில் பெய்டு (Pro/Premier) மெம்பர்ஷிப் இருந்தால், நீங்கள் உருவாக்கிய பாடலுக்கு நீங்களே உரிமையாளர்.
