Visme AI : டிசைனிங் தெரியலையேன்னு கவலைப்படாதீங்க… Visme AI கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க, அது உங்க பிராண்டை உலகத்துக்கே கொண்டு சேர்க்கும்..!




AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தும் நபர்களுக்கு வசதியாக ஆயிரக்கணக்கான புதிய கருவிகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. எந்த வேலைக்கு எந்த டூல்ஸை சிறப்பாக பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் வேளையில், வணிகங்களுக்கான கன்டென்ட் உருவாக்குவது என்பது அதிக நேரத்தை எடுக்கும் ஒரு வேலையாக இருந்து வந்தது. அந்த சிக்கலை தீர்க்க வந்த Visme என்ற ஏஐ தளம், தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஒரு பிராண்டிற்குத் தேவையான உயர்தர கன்டென்டுகளை மிக வேகமாக உருவாக்குவது மட்டுமின்றி, எவ்வித டிசைன் அனுபவமும் இன்றி இதனை பயன்படுத்த முடியும் என்பது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இது ஒரு All-in-one தீர்வாக செயல்படுவதால், உலகளவில் பலரும் இதனை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்லைடுகள் கொண்ட பிரசன்டேஷன்களை உருவாக்குவதில் இது சிறந்து விளங்குகிறது.


சிக்கலான புள்ளிவிவரத் தரவுகளை எளிமையான படங்களாக மாற்றும் இன்போகிராபிக்ஸ் அம்சம் இதன் தனிச்சிறப்பாகும். இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கான பிராண்டட் பதிவுகள் செய்வது, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறிய அனிமேஷன் வீடியோக்களை உருவாக்குவது மற்றும் ‘போரிங்’ ஆன டேட்டாவை சுவாரஸ்யமான வரைபடங்களாக மாற்றி காட்சிப்படுத்துவது ஆகியவை இந்த தளத்தின் முக்கிய பலங்களாகும்.


Visme என்பது நீங்கள் கொடுக்கும் ஒரு சிறிய டெக்ஸ்ட் பிராம்டை வைத்தே, பயன்படுத்த தயாராக இருக்கும் டிசைன்களை நொடியில் உருவாக்கி தந்துவிடும். மேலும், ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறையினர் ஒரே திட்டத்தில் இணைந்து பணியாற்றும் Collaboration வசதியும் இதில் உண்டு. இதன் மூலம் கருத்துகளை பகிர்ந்து திருத்தங்களை உடனுக்குடன் செய்ய முடிவதால், பிராண்ட் ஒருமைப்பாட்டை எளிதாக பராமரிக்க முடியும்.


வணிகர்கள் தங்கள் பிராண்ட் கன்டென்ட்களை 70% குறைவான நேரத்தில் உருவாக்க இந்த ஏஐ உதவுகிறது. மார்க்கெட்டிங் மேலாளர்கள் டிசைன் திறன் இல்லாவிட்டாலும் ‘பிக்சல் பெர்ஃபெக்ட்’ கன்டென்ட்களை மிக எளிமையாக தயாரிக்கலாம். விற்பனை மேலாளர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் Pitch Deck மற்றும் ‘புரப்போசல்களை’ உருவாக்கலாம். மனிதவள துறையினர் பணியாளர் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான கையேடுகளை அமைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.


மொத்தத்தில், இந்த தளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ‘ரெடிமேட் டெம்ப்ளேட்களை’ பயன்படுத்தி உங்கள் பிராண்டிற்கான சோசியல் மீடியா போஸ்ட் முதல் அனைத்து டிஜிட்டல் தேவைகளையும் இலவசமாகவும் வேகமாகவும் பெற்றுக்கொள்ளலாம். கன்டென்ட் உருவாக்கத்தில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த நினைக்கும் எவருக்கும் Visme ஏஐ ஒரு சிறந்த தேர்வாகும்.