Zapier Central AI: 6,000 ஆப்ஸையும் ஒரே கயித்துல கட்டுற வித்தை… இது Zapier Central காட்டுற AI வித்தை.. நீங்க சொன்னா மட்டும் போதும், இது செஞ்சு முடிக்கும்!

 

Zapier Central

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, கணினிகள் நமக்காக அதிக வேலைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ‘Zapier’ இன்று, ஒரு மாதத்திற்கு 200 கோடிக்கும் அதிகமான Tasksகளை செய்து முடிக்கிறது. தற்போது அடுத்தகட்டமாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்காக சுயமாக வேலை செய்யும் ‘Zapier Central’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


முதலில் Zapier Central என்றால் என்ன? என்பதை பார்ப்போம். பொதுவாக AI கருவிகளுக்கு நாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், Zapier Central என்பது ஒரு மென்பொருள் போல அல்லாமல், நம்முடைய குழுவில் இருக்கும் ஒரு சக ஊழியரை போல செயல்படும். நாம் சொல்லும் கட்டளைகளை புரிந்து கொண்டு, பின்னணியில் நமக்காக வேலை செய்யும்.


இதன் தனிச்சிறப்பு என்னவெனில் ஜிமெயில், நோஷன் , கூகுள் ஷீட்ஸ் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் 6,000-க்கும் மேற்பட்ட செயலிகளுடன் இதை இணைக்கலாம். கூகுள் டாக்ஸ் அல்லது நோஷனில் உள்ள சமீபத்திய தகவல்களை படித்து, அதற்கேற்ப இது செயல்படும்.


ஒரு ஸ்பிரட்ஷீட்டில் உள்ள வாடிக்கையாளரின் மனநிலை என்ன அல்லது ஆர்டர் ஸ்டேட்டஸ் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மின்னஞ்சல்களை இதுவே அனுப்பும். ஒரு AI பாட்டிற்கு வேலை சொல்லி கொடுக்க நீங்கள் கோடிங் படிக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண மொழியில் கட்டளைகளை வழங்கினாலே போதும்.


முதலில் உங்கள் கூகுள் ஷீட் அல்லது நோஷன் கணக்கை இணைத்து, உங்கள் பாட்டிற்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும். அதன்பின் ஒரு குறிப்பிட்ட வேலை எப்போது நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்ற வழிமுறைகளை கூற வேண்டும்.


பாட் தயாரானதும், Chatbox நீங்கள் கட்டளைகளை வழங்கலாம். “மின்னஞ்சல் அனுப்பு”, “என் ஸ்பிரட்ஷீட்டை அப்டேட் செய்” என்று நீங்கள் சொன்னால் அது உடனடியாக செய்து முடித்துவிடும்.


புதிய வாடிக்கையாளர் விவரங்களை நம்முடைய CRM-ல் தானாகவே அப்டேட் செய்ய, வாடிக்கையாளர் சேவைக்கான பதில்களைத் தயார் செய்து வைக்க, குழுவினருக்கு வேலைக்கான காலக்கெடுவை நினைவூட்ட ஆகியவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம்.


மொத்தத்தில் Zapier Central நம்முடைய உற்பத்தித்திறனை பல மடங்கு உயர்த்த உதவும் ஒரு புரட்சிகரமான கருவி. நீங்கள் செய்யும் சாதாரண வேலைகளை AIயிடம் ஒப்படைத்துவிட்டு, முக்கியமான முடிவுகளில் உங்கள் கவனத்தைச் செலுத்த இது வழிவகை செய்கிறது.


உலகம் இப்பதான் AIயை ஆச்சரியமா பார்க்குது… ஆனா கர்ட்ஸ்வைல் இதை 35 வருஷத்துக்கு முன்னாடியே கணிச்சு முடிச்சுட்டாரு!