Adobe Podcast AI: மைக் முக்கியமில்ல... உன் மேட்டர் தான் முக்கியம்! மத்ததை Adobe Podcast பாத்துக்கும்! சாதாரண வாய்ஸ்... இனி சர்க்கார் வாய்ஸ்!

adobe podacast


இன்றைய டிஜிட்டல் உலகில் Podcast மற்றும் வீடியோ உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், தரமான ஸ்டுடியோ இல்லாமலும், பின்னணி இரைச்சல்கள் அதிகமுள்ள இடங்களிலும் பதிவு செய்வது பலருக்கு சவாலாக உள்ளது. இந்த சிக்கலை தீர்க்க அடோப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள AI தொழில்நுட்பம் தான் Adobe Podcast. இது ஒரு சாதாரண அறையில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவைக்கூட, அதிநவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்தது போன்ற தரத்திற்கு மாற்றி தருகிறது.

அடோப் போட்காஸ்டின் முக்கிய அம்சங்கள்

1. என்ஹான்ஸ் ஸ்பீச் (Enhance Speech): இதன் மிக முக்கியமான அம்சம் இதுதான். ஒரே ஒரு கிளிக்கில், உங்கள் ஆடியோவில் உள்ள தேவையற்ற இரைச்சல்கள், எதிரொலிகள் அனைத்தையும் நீக்கி, உங்கள் குரலை மிக தெளிவாக மாற்றுகிறது. ஏஐ தொழில்நுட்பம் உங்கள் குரலில் உள்ள நுணுக்கங்களை சரிசெய்து, ஸ்டுடியோ தரம் வாய்ந்த ஒலியை வழங்குகிறது.

2. டெக்ஸ்ட் அடிப்படையிலான எடிட்டிங் : வீடியோ அல்லது ஆடியோவை எடிட் செய்வது பல மணிநேர வேலை. ஆனால், அடோப் போட்காஸ்ட் உங்கள் ஆடியோவை உரையாக மாற்றுகிறது. ஒரு வேர்ட் டாகுமெண்ட்டில் வார்த்தைகளை நீக்குவது போலவே, ஆடியோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை டெக்ஸ்ட் மூலம் நீக்கலாம். இது எடிட்டிங் வேலையை மிக எளிமையாக்குகிறது.

3. ரிமோட் ரெக்கார்டிங் : நீங்கள் உலகின் ஒரு முனையிலும், உங்கள் விருந்தினர் வேறொரு முனையிலும் இருந்தாலும், உயர்தர ஆடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும். இணைய வேகம் குறைவாக இருந்தாலும், தரம் குறையாமல் ஒவ்வொருவரின் குரலையும் தனித்தனி டிராக்குகளாக  இது பதிவு செய்கிறது.

4. ராயல்டி இல்லாத இசை : உங்கள் போட்காஸ்டிற்குத் தேவையான Intro, Outro மற்றும் பின்னணி இசையை அடோப் வழங்குகிறது. இதற்கு நீங்கள் தனியாகக் காப்புரிமை பெறத் தேவையில்லை.

ஏன் அடோப் போட்காஸ்டை பயன்படுத்த வேண்டும்?

இலவச பயன்பாடு: எந்த மென்பொருளையும் டவுன்லோட் செய்யாமல் உங்கள் பிரவுசரிலேயே இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

நேரம் சேமிப்பு: சிக்கலான எடிட்டிங் மென்பொருள்களை கற்க வேண்டிய அவசியமில்லை.

குரல் தெளிவு: ஒரு சாதாரண ஸ்மார்ட்போனில் பதிவு செய்தாலும், அது விலை உயர்ந்த மைக்ரோபோனில் பதிவு செய்தது போன்ற உணர்வை தரும்.

எப்படித் தொடங்குவது?

அடோப் போட்காஸ்ட் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் ஆடியோ கோப்பை  அப்லோட் செய்யுங்கள். சில நொடிகளில் மேம்படுத்தப்பட்ட கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 2026 அப்டேட்களின்படி, தற்போது வீடியோக்களுக்கு கேப்ஷன் சேர்ப்பது மற்றும் இசையை நீக்குவது போன்ற கூடுதல் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Udio AI: இசைங்கிறது இனி படிக்கிற கலை இல்ல... நீங்க நினைக்கிறத அப்படியே ஒலிக்க வைக்கிற வித்தை! கற்பனை மட்டும் இருந்தா Udio AI வச்சு இசை உலகத்தையே ஆளலாம்!