AI Lawyer: வழக்குன்னு வந்துட்டா வக்கீல் கிட்ட போவோம்... ஆனா அந்த வக்கீலே இனி AI Lawyer கிட்ட தான் போவாரு.. சட்டம் ஒரு இருட்டறைன்னு சொன்னாங்க... ஆனா அந்த அறைக்குள்ள வெளிச்சம் போட வந்திருக்கு இந்த AI Lawyer!

 

AI Lawyer

சட்ட சிக்கல்களால் அவதிப்படுபவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது AI Lawyer என்ற நவீன செயற்கை நுண்ணறிவு தளம். சட்ட நுணுக்கங்களை பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

AI Lawyer: உங்கள் சட்டைப்பையில் ஒரு வழக்கறிஞர்!

சட்ட ஆலோசனைகளுக்காக அதிக பணம் செலவழிப்பது, அப்பாயிண்ட்மெண்டிற்காக நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற பழைய முறைகளுக்கு இந்த தளம் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு தனிநபராகவோ, மாணவராகவோ அல்லது ஒரு சட்ட நிறுவனமாகவோ இருந்தாலும், உங்கள் தேவைக்கேற்ப இது தன்னை மாற்றிக்கொள்கிறது.

இந்தத் தளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

ஆவணங்களை கையாளுதல்: நீண்ட சட்ட ஒப்பந்தங்களை நொடிகளில் சுருக்கி கூறுவது , படங்களை உரையாக மாற்றுவது மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்பது போன்ற பணிகளை மிக வேகமாக செய்கிறது.

பல மணிநேரங்கள் தேவைப்படும் சட்ட ஆய்வுகளை வெறும் சில வினாடிகளில் முடித்துத் தருகிறது.

பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படுவதை இந்த தளம் உறுதி செய்கிறது.

எப்போது வேண்டுமானாலும் உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு பதிலளிக்க இந்த விர்ச்சுவல் அசிஸ்டண்ட் தயாராக இருக்கும்.

யார் யாருக்கெல்லாம் இது பயன்படும்?

பொதுமக்கள்: கடினமான சட்ட சொற்களை எளிமையான மொழியில் புரிந்துகொள்ள உதவுகிறது.

வழக்கறிஞர்கள்: வழக்கின் போக்கை கண்டறியவும், ஆவணங்களை தயார் செய்யவும் இது ஒரு சிறந்த துணையாக அமைகிறது.

மாணவர்கள்: சட்ட கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகளை தயார் செய்ய இது பெரிதும் உதவுகிறது.

சட்ட ரீதியான கடிதங்கள், ஒப்பந்தங்களை ரத்து செய்யும் கடிதங்கள் போன்றவற்றை ஒரு நொடியில் உருவாக்கி தரும் இந்த தொழில்நுட்பம், சட்டத்துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vocai AI: பேட்டரி வெடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணாது... வாயு வர்றப்பவே வார்னிங் கொடுக்கும், அதுதான் Vocai! உங்க பேட்டரிக்குக் கண் இல்லாம இருக்கலாம், ஆனா அதுக்கு ஆறாவது அறிவா Vocai இருக்கும்!