VEED AI: கேமரா வேணாம்... லைட் வேணாம்... உன் மூளையில இருக்குற ஐடியா மட்டும் போதும்! VEED.AI-வுல 'Generate' கொடுத்தா போதும், உலகம் உன்னை திரும்பி பார்க்கும்!

veed ai


இன்றைய டிஜிட்டல் உலகில், ஒரு வணிகமோ அல்லது தனிநபரோ தங்களை அடையாளப்படுத்தி கொள்ள வீடியோக்கள் மிக முக்கியமானவை. ஆனால், வீடியோ எடிட்டிங் என்பது அனைவருக்கும் கைவந்த கலை அல்ல. இந்த சவாலை முறியடிக்க வந்துள்ளது VEED.IO. எவ்வித கேமராவோ அல்லது விலையுயர்ந்த கருவிகளோ இன்றி, AI மூலம் நிமிடங்களில் தரமான வீடியோக்களை உருவாக்க இந்தத் தளம் வழிவகை செய்கிறது.

கற்பனையை வீடியோவாக்கும் மந்திரம்

VEED.IO-வின் மிகச்சிறந்த அம்சம் அதன் AI Video Generator ஆகும். உங்கள் மனதில் உள்ள கருத்தை Prompt மூலம் ஒரே ஒரு வரியாக உள்ளீடு செய்தால் போதும், அதுவே திரைக்கதை அமைத்து, காட்சிகளை உருவாக்கி, பின்னணி இசையுடன் முழுமையான வீடியோவை தந்துவிடும். குறிப்பாக, விளம்பரங்கள் , விளக்கப்பட வீடியோக்கள் , மற்றும் தயாரிப்பு செயல்முறை விளக்கங்கள் போன்றவற்றை உருவாக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அனைவரையும் ஈர்க்கும் தானியங்கி சப்டைட்டில் வசதி

சமூக வலைதளங்களில் ஒலியில்லாமல் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் கவனத்தை ஈர்க்க Automatic Subtitle Generator வசதியை VEED.IO வழங்குகிறது. இணையத்திலேயே மிகச்சிறந்த சப்டைட்டில்களை உருவாக்கும் தளம் என இது பெயர் பெற்றுள்ளது. பல்வேறு மொழிகளில் தானாகவே சப்டைட்டில்களை உருவாக்குவதுடன், உங்கள் பிராண்டிற்கு ஏற்ற வண்ணங்கள் மற்றும் எழுத்துருக்களில் அவற்றை மாற்றியமைக்கவும் முடியும்.

பிராண்ட் அடையாளம் 

உங்கள் நிறுவனம் அல்லது தனிப்பட்ட பிராண்டிற்கென ஒரு குறிப்பிட்ட நிறம், லோகோ மற்றும் குரல் இருக்கலாம். VEED.IO-வில் உங்கள் பிராண்ட் கிட்டை ஒருமுறை பதிவேற்றினால் போதும், ஒவ்வொரு வீடியோவிலும் அவை தானாகவே பொருத்தப்படும். இது உங்கள் வீடியோக்கள் எப்போதுமே ஒரு தொழில்முறை தரத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது.

மிரட்டலான AI கருவிகள் மற்றும் மாடல்கள்

VEED.IO வெறும் எடிட்டிங் தளம் மட்டுமல்ல, இது பல சக்திவாய்ந்த AI மாடல்களின் சங்கமம்:

வீடியோ மாடல்கள்: Sora 2, Veo 3.1, Kling AI, PixVerse AI, மற்றும் Fabric 1.0.

அதிநவீன வசதிகள்: AI Avatar (உருவக பொம்மைகள்), Voice Dubbing (மொழியாக்கம்), Eye Contact AI (கேமராவைப் பார்ப்பது போன்ற தோற்றம்), மற்றும் Background Remover 

ஒலி மேலாண்மை: ஆடியோவில் உள்ள இரைச்சலை நீக்கும் 'Remove Background Noise' மற்றும் உரையை ஒலியாக மாற்றும் 'Text to Speech' வசதிகள் இதில் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன.

உலகத்தரம் வாய்ந்த அங்கீகாரம்

2026-ஆம் ஆண்டின் சிறந்த AI மென்பொருள் நிறுவனம் என்ற ஜி2 விருதை பெற்றுள்ள VEED.IO, மில்லியன் கணக்கான குழுக்களால் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. Reels, TikTok, மற்றும் YouTube)வீடியோக்களை உருவாக்க இது ஒரு தவிர்க்க முடியாத கருவியாக உருவெடுத்துள்ளது.

Krea AI: எழுத்துல நீங்க கொடுத்தா... எண்ணத்துல வர்றதைவிட நேர்த்தியா நிஜமாக்கும் இந்த Krea.ai! கற்பனை உன்னோடது... அதை உலகத்தரம் வாய்ந்த படைப்பா மாத்துற பொறுப்பு எங்களோடது!