Tome App AI: டிசைன் பண்ணத் தெரியலன்னு கவலைப்படாதீங்க .. Tome AI இருந்தா, நீதான் கிங் ஆஃப் பிரசன்டேஷன்! 1 மணிநேர வேலை இனி 1 நிமிஷத்துல முடியும்...

 

tome ai

Tome App AI என்பது வெறும் சாதாரண ஸ்லைடு மேக்கர் அல்ல; இது உங்கள் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் ஒரு டிஜிட்டல் உதவியாளர். பிசினஸ் மீட்டிங், கல்வி சார் பாடங்கள் அல்லது மார்க்கெட்டிங் என எதுவாக இருந்தாலும், நீங்கள் ஒரு சிறிய Text Prompt கொடுத்தால் போதும். இதுவே தலைப்பு, உள்ளடக்கம் , வடிவமைப்பு  மற்றும் படங்களை உருவாக்கி முழுமையான பிபிடி-யை வழங்கிவிடும்.

Tome App AI-ன் சிறப்பம்சங்கள்:

Claude Opus 4.6 ஆற்றல்: உலகின் மிகச்சிறந்த AI மாடல்களில் ஒன்றான கிளாட் ஓபஸ் 4.6 கொண்டு உருவாக்கப்படுவதால், இதில் உள்ள தகவல்கள் மிகவும் துல்லியமாகவும் தொழில்முறையாகவும் இருக்கும்.

AI Beautify PPT: ஏற்கனவே உங்களிடம் இருக்கும் பழைய ஸ்லைடுகளை அப்லோட் செய்தால், அவற்றை நவீன டிசைன்களுடன் மெருகூட்டித் தரும்.

பல்வேறு மாற்றங்கள் : PDF-ஐ PPT-யாக மாற்றுவது, யூடியூப் வீடியோவை பிபிடி-யாக மாற்றுவது, வேர்ட் ஆவணங்களை ஸ்லைடுகளாக மாற்றுவது என பல கருவிகள் இதில் உள்ளன.

பேச்சாளர் குறிப்புகள் : ஸ்லைடுகளை உருவாக்கும் போதே, நீங்கள் மேடையில் பேசுவதற்கு தேவையான குறிப்புகளையும் இது தானாகவே தயாரித்துக் கொடுக்கும்.

யாருக்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்?

தொழில்முனைவோர் : முதலீட்டாளர்களிடம் தங்கள் திட்டங்களை விளக்க  உதவும்.

மாணவர்கள் & ஆசிரியர்கள்: கடினமான பாடங்களை எளிமையான பட விளக்கங்களுடன் தயாரிக்க உதவும்.

மார்க்கெட்டிங் நிபுணர்கள்: வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அறிக்கைகளை மிக வேகமாக உருவாக்க உதவும்.

Tome App AI-யை பயன்படுத்துவது எப்படி?

TomeApp.AI தளத்திற்கு சென்று, உங்கள் தலைப்பை டைப் செய்யுங்கள். மொழி மற்றும் ஸ்லைடு எண்ணிக்கையை தேர்வு செய்யுங்கள். 'Generate' என்பதை கிளிக் செய்தால், ஒரு சில நிமிடங்களில் தொழில்முறை தரத்திலான பிரசன்டேஷன் உங்கள் கண் முன்னே இருக்கும். நீங்கள் விரும்பினால் ஆன்லைனிலேயே எடிட் செய்து, பின்னர் PPTX கோப்பாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ChatSonic AI: GPT-ல தொடங்கி Grok வரைக்கும்... எல்லா AI-யும் ஒரே இடத்துல... இனி உங்களோட தேடலுக்கு பஞ்சமே இல்ல! ChatSonic இருந்தா நீங்கதான் டாப்!