இனிமேல் Nutritionistஐ தேடி போக வேண்டிய அவசியம் இல்லை.. உங்கள் சட்டை பையிலேயே ஒரு Nutritionist இருக்கிறார்.. அவர் தான் MealMind AI செயலி

mealmind AI

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், உடல் நலத்தை பேணுவது என்பது பலருக்கும் ஒரு சவாலான காரியமாக உள்ளது. குறிப்பாக, சரியான உணவை தேர்ந்தெடுப்பது, கலோரி கணக்கீடு மற்றும் வாராந்திர உணவு திட்டமிடல் போன்றவற்றிற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்கவும், உங்கள் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் MealMind என்ற நவீன AI செயலி அறிமுகமாகியுள்ளது. இது உங்கள் உடல் இலக்குகள் மற்றும் உணவு விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட உணவு திட்டங்களை நொடிகளில் உருவாக்கி தருகிறது.


MealMind செயலியின் செயல்பாடானது மிகவும் எளிமையானது. பயனர்கள் முதலில் தங்கள் உடல் அமைப்பு, தற்போதைய எடை, அடைய வேண்டிய இலக்கு  மற்றும் உணவு முறைகள்  குறித்த விவரங்களை படிவத்தில் நிரப்ப வேண்டும். நீங்கள் ஒரு காபி குடிக்கும் நேரத்திற்குள்ளாகவே, AI தொழில்நுட்பம் உங்கள் தேவைகளை ஆய்வு செய்து, உங்களுக்கான பிரத்யேக உணவு அட்டவணையை உருவாக்கி தருகிறது. இதில் ஒவ்வொரு வேளை உணவிலும் எவ்வளவு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது என்ற துல்லியமான விவரங்களும் அடங்கும்.


இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம் Interactive Shopping List ஆகும். வாராந்திர உணவு திட்டத்திற்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதை இது மிகவும் எளிதாக்குகிறது. சூப்பர் மார்க்கெட்டில் எதை வாங்குவது என்று குழப்பமடையாமல், திட்டமிடப்பட்ட பொருட்களை மட்டும் வாங்குவதன் மூலம் உங்கள் நேரமும் பணமும் மிச்சமாகிறது. மேலும், சமையலில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிதாக சமைக்கும் வகையில், மிக தெளிவான செய்முறை விளக்கங்களையும் இந்த AI வழங்குகிறது.


உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதல் ஜிம்மிற்கு சென்று தசை வலிமையை அதிகரிக்க விரும்புபவர்கள் வரை அனைவருக்கும் MealMind ஒரு சிறந்த ஆலோசகராக செயல்படுகிறது. இது வெறும் ஒரு செயலி மட்டுமல்ல, உங்கள் சட்டை பையிலேயே இருக்கும் ஒரு தனிப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் போன்றது. குறிப்பாக, சைவ உணவு உண்பவர்கள் அல்லது அசைவ உணவு உண்பவர்கள், தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்கிறதா என்பதை இந்த செயலி மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.


MealMind தளத்தின் நம்பகத்தன்மைக்கு அதன் பயனர்களே சாட்சியாக உள்ளனர். உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பலரும் இந்த செயலி தங்கள் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளனர். "சூப்பர் மார்க்கெட்டில் என்ன வாங்குவது என்று தெரியாமல் திகைத்து நின்ற எனக்கு, MealMind ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது" என்று பயனர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். ஒரு வாரத்திற்கான முழுமையான உணவு திட்டத்தை பெற குறைந்த கட்டணமே  வசூலிக்கப்படுகிறது. இது நாம் கைமுறையாக திட்டமிட செலவிடும் நேரத்தை விட மிக குறைவான தொகையாகும்.


புதிய பயனர்களுக்கு உதவும் வகையில், முதல் ஒரு நாள் உணவு திட்டத்தை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் சேவையின் தரத்தை உணர்ந்து கொண்ட பிறகு நீங்கள் கட்டணம் செலுத்தலாம். 

கோளாறை கண்டுபிடிக்கிறது மட்டும் இது வேலையில்ல... மின்னல் வேகத்தில் கோளாறை சரிசெய்யும்.. இது ஆல்-இன்-ஆல் Resolve AI!