தற்போதைய டிஜிட்டல் உலகில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் மாணவர்கள் தங்களின் பாடத்திட்டங்களை முடிக்க AI கருவிகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் AI கருவிகளை பொறுப்புடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முன்னோடித் தளமே Passed.AI. இது வெறும் AI கண்டறியும் கருவி மட்டுமல்ல, மாணவர்களின் எழுத்து திறனை மேம்படுத்தவும், கல்விசார் நேர்மையை நிலைநாட்டவும் உதவும் ஒரு முழுமையான தொகுப்பாகும்.
Passed.AI பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அவற்றுள் சில முக்கியமானவை குறித்து தற்போது பார்ப்போம்.
Document Audit:
மாணவர்கள் ஒரு Document உருவாக்க எவ்வளவு நேரம் செலவிட்டார்கள், அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த தணிக்கை மூலம் ஆசிரியர்கள் அறிந்துகொள்ளலாம். இது மாணவர்களின் கடின உழைப்பை கண்டறிய உதவுகிறது.
Replay Tool:
ஒரு மாணவர் தனது Documentஐ எவ்வாறு எழுதினார் என்பதை ஆசிரியர்கள் ஒரு வீடியோவை போல திரையில் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம், எங்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.
History Report: ஒரு ஆவணம் உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன் இறுதி வடிவம் வரை நடந்த அனைத்து திருத்தங்களையும் இது காலவரிசைப்படி பட்டியலிடுகிறது.
AI மற்றும் பிளாஜியரிசம் கண்டறிதல்:
உலகத்தரம் வாய்ந்த Originality.ai உடன் இணைந்து, ஒரு கட்டுரை மனிதனால் எழுதப்பட்டதா அல்லது AI-ஆல் உருவாக்கப்பட்டதா என்பதையும், அதில் மற்றவர்களின் படைப்புகள் திருடப்பட்டுள்ளதா என்பதையும் இது துல்லியமாக கண்டறியும்.
தவறான முடிவுகளை குறைக்கும் இரண்டாம் நிலை சோதனைகள்
AI கண்டறியும் கருவிகளில் 'False Positives' அதாவது மனிதன் எழுதியதை AI என்று காட்டுவது மற்றும் 'False Negatives' அதாவது AI எழுதியதை மனிதன் என்று காட்டுவது போன்ற பிழைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், Passed.AI வெறும் ஒரு முடிவை மட்டும் தராமல், மாணவர் ஆவணத்திற்காக செலவிட்ட நேரம், ஆவணத்தின் ஓட்டம் , மற்றும் பங்களிப்புகள் போன்ற கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இது ஆசிரியர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் முழுமையான படத்தைப் பார்க்க உதவுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நன்மைகள்
ஆசிரியர்களுக்கு: மாணவர்களின் எழுத்து திறனை தனிப்பட்ட முறையில் மதிப்பிடவும், அவர்கள் சரியான முறையில் AIஐ பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்யவும் இது உதவுகிறது. கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் இல்லாமலேயே ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் இதை பயன்படுத்த தொடங்கலாம்.
மாணவர்களுக்கு: தாங்களாகவே கடினமாக உழைத்து எழுதிய கட்டுரைகளை, யாராவது AI என்று தவறாக குற்றம் சாட்டினால், Passed.AI வழங்கும் விரிவான அறிக்கைகள் மூலம் தங்களின் நேர்மையை நிரூபிக்க முடியும். இது மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக அமைகிறது.
எளிதான பயன்பாடு மற்றும் மொழிக் கொள்கை
Passed.AI ஒரு கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் எளிதாக கிடைக்கிறது. மாணவர்கள் புதிய மென்பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் வழக்கம் போல கூகுள் டாக்ஸில் எழுதினால் போதும். இந்த தளம் எந்த மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தையும் ஆய்வு செய்யும் திறன் கொண்டது. இருப்பினும், AI மற்றும் பிளாஜியரிசம் கண்டறிதல் போன்ற சில அம்சங்கள் தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன.
கல்வித்துறையில் ஒரு புதிய விடியல்
AI கருவிகளை தடை செய்வதை விட, அவற்றை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பதை மாணவர்களுக்கு கற்பிப்பதே இன்றைய காலத்தின் தேவை. Passed.AI அந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது. இது மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதோடு, ஆசிரியர்களுக்கு ஒரு நம்பகமான வழிகாட்டியாகவும் திகழ்கிறது. கல்வியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை விரும்பும் எவருக்கும் Passed.AI ஒரு தவிர்க்க முடியாத கருவியாகும்.
