இன்றைய போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில், ஒரு நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்க உங்கள் ரெஸ்யூம் தனித்துவமாக இருக்க வேண்டியது அவசியம். பல மணிநேரம் செலவழித்து வடிவமைக்க வேண்டிய வேலையை, Resumonk தளம் இப்போது மிகவும் எளிதாக்கியுள்ளது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு நேர்த்தியான ரெஸ்யூமை நிமிடங்களில் உருவாக்க இது வழிவகை செய்கிறது.
Resumonk எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் ரெஸ்யூமை உருவாக்க மூன்று எளிய வழிமுறைகளை இத்தளம் வழங்குகிறது. ஒன்று உங்கள் தற்போதைய ரெஸ்யூமைப் பதிவேற்றலாம் அல்லது உங்கள் லிங்க்ட்இன் புரொஃபைலை இறக்குமதி செய்யலாம். எதுவும் இல்லையென்றால், உங்கள் தகவல்களை நேரடியாக உள்ளிடலாம்.
இரண்டாவதாக 'Rewrite with AI' அல்லது 'Get AI Suggestions' போன்ற அம்சங்களை பயன்படுத்தி, உங்கள் அனுபவங்களையும் திறமைகளையும் இன்னும் சிறப்பாகவும், தொழில்முறை ரீதியாகவும் மாற்றியமைக்கலாம்.
மூன்றாவ்தாக 20-க்கும் மேற்பட்ட சர்வதேச தரம் வாய்ந்த டிசைன்களில் இருந்து உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து, PDF அல்லது DOCX வடிவில் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
ஏன் Resumonk-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நேர்மையான விலை நிர்ணயம்: பல தளங்கள் மறைமுக கட்டணங்களை வசூலிக்கும் நிலையில், Resumonk தனது கட்டண விவரங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்குகிறது.
LinkedIn தகவல்களை அப்படியே ஒரு அழகான ரெஸ்யூமாக மாற்றும் வசதி இதற்கு உண்டு. உங்கள் ரெஸ்யூம் டிசைனுக்கு பொருத்தமான 'கவர் லெட்டர்'களையும் இதிலேயே உருவாக்கி, வேலை விண்ணப்பங்களை முழுமையாக்கலாம்.
வெவ்வேறு வேலைகளுக்கு ஏற்ப உங்கள் ரெஸ்யூமை 'Clone' செய்து மாற்றியமைத்து கொள்ளலாம். உங்கள் டேஷ்போர்டிலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடியும்.
Online Hosting: உங்கள் ரெஸ்யூமை ஒரு தனித்துவமான URL அதாவது esumonk.com/your-name) மூலம் ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.
18 வகையான Fonts மற்றும் எண்ணற்ற வண்ணங்களை பயன்படுத்தி உங்கள் ரெஸ்யூமின் அழகை கூட்டலாம்.
வேலைவாய்ப்பு இடைவெளிகளை எவ்வாறு கையாள்வது போன்ற பயனுள்ள கட்டுரைகள் மற்றும் குறிப்புகளையும் இத்தளம் வழங்குகிறது.
