ShortlyAI : மாடல் எதுவா வேணா இருக்கலாம்... ஆனா மேடை ShortlyAI-ஆ தான் இருக்கும்! GPT-5-ல இருந்து Gemini வரைக்கும்... இனி எல்லாமே நம்ம கன்ட்ரோல்ல!

 

shortly AI

தொழில்நுட்ப உலகம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய AI மாடலை அறிமுகப்படுத்தி வருகிறது. GPT-4, Gemini, Claude, Llama என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகச் சந்தா செலுத்துவதும், வெவ்வேறு தளங்களுக்கு மாறி மாறிச் செல்வதும் பயனர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிறது ShortlyAI.

100+ AI மாடல்கள் - ஒரே தளம்

ShortlyAI-ன் சிறப்பம்சமே அதன் ஒருங்கிணைப்புதான். உலகின் முன்னணி 100க்கும் மேற்பட்ட Large Language Modelsகளை இது ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான எந்த ஒரு மாடலையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். குறிப்பாக, வரவிருக்கும் GPT-5 போன்ற அதிநவீன மாடல்களையும் இதில் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான கட்டணம், நிறைவான சேவை

தனித்தனியாக ஒவ்வொரு AI நிறுவனத்திற்கும் பணம் செலுத்துவதற்கு பதிலாக, ShortlyAI மூலம் மிக குறைந்த செலவில் அனைத்து மாடல்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இது தனிநபர் பயனர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக இருக்கும்.

யாருக்கெல்லாம் இது பயன்படும்?

ShortlyAI பல்வேறு துறையினரை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது:

மார்க்கெட்டிங் நிபுணர்கள்: விளம்பர நகல்கள் மற்றும் தயாரிப்பு பக்கங்களை உருவாக்க.

கல்வித் துறை: கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி சுருக்கங்களைத் தயாரிக்க.

படைப்பு எழுத்தாளர்கள்: நாவல்கள், சிறுகதைகள் மற்றும் திரைக்கதைகள் எழுத.

வலைப்பதிவர்கள்: சமூக ஊடக பதிவுகள் மற்றும் பிளாக் கட்டுரைகளை உருவாக்க.

காத்திருப்புப் பட்டியலில் இணையுங்கள் 

தற்போது ShortlyAI தனது தொடக்க கட்டத்தில் உள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அதன் இணையதளத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இணைந்து கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

Draftbit AI: Prompt குடுத்தா ஆப் ரெடி. AI வேகம்... ஹியூமன் விவேகம்... இதுதான் Draftbit விஸ்வரூபம்!