Switchboard Canvas: மணிநேர டிசைனிங் வேலைக்கு இனிமேல் வைங்க ஒரு 'எண்ட் கார்டு'... Switchboard Canvas வந்தாச்சு, செகண்ட்ல முடியும் டிஜிட்டல் கார்டு!

switchboard canvas

இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களுக்காக உடனுக்குடன் Imagesகளை உருவாக்குவது சவாலான காரியமாக உள்ளது. இந்த சிக்கலுக்கு தீர்வாக, Switchboard Canvas எனும் தளம், API மற்றும் No-code கருவிகள் மூலம் பட உருவாக்கத்தை Automate முறையில் மாற்றியமைக்கிறது. கிராஃபிக் டிசைனர்கள் மற்றும் டெவலப்பர்கள் மணிக்கணக்கில் செலவிடும் வேலையை இது சில நொடிகளில் முடித்து கொடுக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்

Switchboard Canvas தளத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் Template Designer ஆகும். பயனர்கள் தங்களுக்கு தேவையான வடிவமைப்புகளை மிகவும் எளிமையான முறையில் இணையத்திலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். இதில் உள்ள Fully Responsive வசதி மூலம், ஒரு படத்தை வெவ்வேறு அளவுகளில் உருவாக்கினாலும், அதன் தரம் மாறாமல் பிக்சல் துல்லியத்துடன் அமையும். மேலும், உங்களுக்கு பிடித்தமான Fonts மற்றும் பிராண்டிங் படங்களை நீங்களே பதிவேற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தானியங்கி முறை 

டெவலப்பர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாகும். ஒரே ஒரு Single API call மூலம், வெவ்வேறு சமூக ஊடகங்களுக்கு தேவையான உதாரணமாக Instagram, Twitter, Facebook என பல அளவிலான படங்களை ஒரே நேரத்தில் உருவாக்க முடியும். Zapier அல்லது Pabbly Connect போன்ற நோ-கோட் கருவிகளுடன் இதை இணைப்பதன் மூலம், எந்தவிதமான கோடிங் அறிவும் இல்லாமலேயே உங்கள் பணிப்பாய்வை தானியங்கி முறையில் மாற்றி அமைக்கலாம்.

மொழியாக்கம் மற்றும் பிற வசதிகள்

Switchboard Canvasன் மற்றொரு தனித்துவமான அம்சம் அதன் On the fly மொழியாக்க வசதியாகும். உங்கள் படங்களில் உள்ள உரைகளை 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்க முடியும். இது உலகளாவிய சந்தையை கொண்ட நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், படங்களின் பின்னணியை நீக்குதல் , PDF உருவாக்குதல் மற்றும் Google Sheets மூலம் படங்களை உருவாக்குதல் போன்ற கூடுதல் கருவிகளும் இதில் அடங்கும்.

சோதனை மற்றும் சந்தா விவரங்கள்

புதிய பயனர்களுக்கு 14 நாட்கள் இலவச சோதனை காலம் வழங்கப்படுகிறது. இதற்கு கிரெடிட் கார்டு விவரங்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை காலத்தில் அனைத்து வசதிகளையும் முழுமையாக பயன்படுத்தி பார்த்துவிட்டு, அதன் பிறகு உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

சுவிட்ச்போர்டு கேன்வாஸ் என்பது வெறும் பட உருவாக்கும் கருவி மட்டுமல்ல, அது படைப்பாற்றலையும் வேகத்தையும் இணைக்கும் ஒரு நவீன பாலமாகும்.

உலகத்துல இருக்குற 500 வகை சத்தமும் வரட்டும், ஒரு மில்லியன் ரூம் எபெக்ட்டும் வரட்டும்... எல்லாத்தையும் தாண்டி உங்க குரல் மட்டும் தெள்ளத்தெளிவா கேட்கும்! அதுதான் ai-coustics மேஜிக்..!