நவீன உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் உள்ளது. குறிப்பாக, ஒரு காலத்தில் மனித கற்பனைக்கும் எட்டாத விஷயங்களை இன்று AI மிக எளிதாக செய்து முடிக்கிறது. அத்தகைய ஒரு புரட்சிகரமான மாற்றத்தை தான் தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய OpenARt AI தளம் வழங்குகிறது.
ஒரே தளத்தில் அணைத்து படைப்புகளும்
OpenARt AI தளத்தின் சிறப்பம்சமே, நீங்கள் எதை தேடினாலும் - அது ஒரு கதையாகவோ , வீடியோவாகவோ , புகைப்படமாகவோ அல்லது ஒரு புதிய உலகமாகவோ இருந்தாலும் - அனைத்தையும் சில நொடிகளில் உருவாக்கி தருகிறது. 'GPT Image 2.0' மற்றும் 'Seedance 2.0' போன்ற மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மூலம், தத்ரூபமான படைப்புகளை எவராலும் உருவாக்க முடியும்.
ஆடியோ மற்றும் வீடியோவில் புதிய பரிணாமம்
சினிமா துறையில் பல மணிநேரம் செலவழித்து செய்யும் பணிகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் நொடிகளில் செய்கிறது. 'Lip-Sync' வசதி மூலம் ஒரு புகைப்படத்தை பேச வைக்க முடியும், 'Motion Sync' மூலம் அசைவுகளை கட்டுப்படுத்த முடியும். மேலும், 'Create Music' வசதி மூலம் அசல் இசையையும், 'Voice-over' மூலம் இயற்கையான குரல்களையும் உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் ஷாட் மற்றும் மல்டி வியூ
படைப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக 'Smart Shot' வசதி அமைந்துள்ளது. இது ஒரு காட்சியிலிருந்து ஸ்டோரிபோர்டு மற்றும் வீடியோவை உருவாக்கி தருகிறது. 'Multi View' தொழில்நுட்பம் மூலம் ஒரே ஒரு குறிப்பு படத்தை வைத்துக்கொண்டு 9 வெவ்வேறு கேமரா கோணங்களில் படங்களை உருவாக்க முடியும். இது இயக்குநர்கள் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
