Aizzy AI: தொழில்நுட்பம் வளரலாம், ஆனா மனிதனின் சுதந்திரம் குலையக்கூடாது.. அதுதான் Aizzy-யின் பாலிசி! டேட்டா என்பது தனிமனிதனின் சொத்து.. அதை திருடத் துடிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சாத்து!

aizzy

இன்றைய நவீன உலகில் AI தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், பெரும்பாலான AI தளங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதையும், அவர்களின் உரையாடல்களை கண்காணிப்பதையும் வழக்கமாகக்கொண்டுள்ளன. இந்த சூழலில், உங்கள் Prompt உங்களுக்கே சொந்தம்" என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கியுள்ளது Aizzy.ai. இது எந்தவிதமான டிராக்கிங் அல்லது தனிப்பட்ட தரவு சேகரிப்பும் இல்லாத, முற்றிலும் Anonymous ஒரு AI தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப தடைகள் இல்லாத எளிமையான பயன்பாடு

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த பலருக்கு கணினி அறிவு அல்லது Python, Docker போன்ற தொழில்நுட்ப பின்புலம் தேவைப்படுகிறது. ஆனால், Aizzy.ai இந்த தடைகளை தகர்த்து, ஒரு சாதாரண இணைய உலாவியின் மூலமாகவே எந்த கட்டணமும், சிரமமும் இன்றி AI-ஐ அணுகும் வசதியை வழங்குகிறது. பயனர்கள் மென்பொருளை தரவிறக்கம் செய்யவோ அல்லது சிக்கலான அமைப்புகளை செய்யவோ வேண்டிய அவசியம் இல்லை.

200-க்கும் மேற்பட்ட AI மாடல்கள் - ஒரே இடத்தில்

பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான GPT, Claude, Gemini, Llama, Mistral போன்ற 200-க்கும் மேற்பட்ட முன்னணி AI மாடல்களை ஒரே தளத்தில் மாற்றிக்கொள்ளும் வசதியை OpenRouter மூலம் Aizzy.ai வழங்குகிறது. நீங்கள் எதற்கும் சந்தா கட்ட வேண்டியதில்லை; Pay-as-you-go முறையில் பயன்படுத்தினால் போதும். இது பயனர்களுக்கு பெரிய அளவிலான சுதந்திரத்தை வழங்குகிறது.

தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் சமூக திறன்கள் 

Aizzy.ai-ன் Agents நிகழ்நேரத்தில் இணையத்தை தேடி, துல்லியமான தகவல்களை வழங்குகிறார்கள். இது வெறும் தகவல்களை தருவதோடு மட்டுமல்லாமல், தன்னாட்சி முறையில் கருவிகளை இயக்குதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வேலைகளை செய்தல் போன்ற 'சூப்பர் பவர்' வசதிகளையும் கொண்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான திறன்களை எளிதாக இறக்குமதி செய்து கொள்ளலாம்.

Aizzy-யின் முக்கிய வாக்குறுதி

Aizzy.ai-ன் மிக முக்கியமான அம்சம் அதன் பாதுகாப்பு கொள்கை. இது பயனர்களின் IP முகவரியையோ, குக்கீகளையோ அல்லது உலாவியின் தனிப்பட்ட அடையாளங்களையோ சேகரிப்பதில்லை. இலவச ZDR மாடல்களை பயன்படுத்த எந்த கணக்கும் தேவைப்படாது. பணம் செலுத்தி பயன்படுத்தும் மாடல்களுக்கு, Phantom அல்லது Vultisig போன்ற கிரிப்டோ வாலட்கள் மூலம் மட்டுமே லாக்-இன் செய்யலாம். இதனால் உங்கள் பெயர், மின்னஞ்சல் போன்ற எந்தத் தகவலும் AI நிறுவனங்களுக்கு செல்லாது.

உலாவிலேயே தரவு பாதுகாப்பு

Aizzy.ai உங்கள் உரையாடல்களை உங்கள் கணினி உலாவியிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஆவணங்களை செயலாக்கம் செய்யும் போது, அவை 100% உங்கள் உலாவியிலேயே WASM தொழில்நுட்பம் மூலம் நடைபெறுகிறது. வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இந்தத் தொழில்நுட்பம், AI உலகில் தனியுரிமையை விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

'Plagiarism Remover AI : கூகுள் ரேங்கிங்ல முதல் இடத்தை பிடிக்கணும்னா டூப்ளிகேட் வேலை ஆகாது தம்பி... கன்டென்ட்ல கெத்து காட்டணும்னா, எங்க 'Plagiarism Remover AI டூலை தொட்டு பாரு, ரிசல்ட் சும்மா தெறிக்கும்!