Imglarger AI: படம் மங்கலா இருந்தா என்ன? எடிட்டிங் சிங்கமா இருந்தா தரம் தானா உயரும்! Imglarger இருக்க கவலை ஏன்?

imglarger

இன்றைய டிஜிட்டல் உலகில், தெளிவான மற்றும் அழகான புகைப்படங்கள் நமது சமூக ஊடக பக்கங்கள் முதல் தொழில்முறை வேலைகள் வரை அனைத்திற்கும் மிக அவசியமானவை. ஆனால், பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் Blur அல்லது தரம் Low Resolution ஆக இருக்கின்றன. இந்த பிரச்சனையை தீர்க்க வந்துள்ளதுதான் Imglarger என்ற அற்புதமான ஆன்லைன் தளம்.

AI Image Upscaler

Imglarger தளத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் AI Upscaling தொழில்நுட்பம். ஒரு சாதாரண புகைப்படத்தை அதன் தரம் குறையாமல் 200%, 400%, அல்லது 800% வரை பெரிதாக்க இது உதவுகிறது. AI மூலம் பிக்சல்களை சீரமைத்து, மங்கலான படங்களைக் கூட 8K தரத்திற்கு இது மாற்றுகிறது.

AI Uncrop & Editing

உங்கள் புகைப்படத்தின் ஓரங்கள் வெட்டப்பட்டிருந்தால், அதை AI தொழில்நுட்பம் மூலம் தானாகவே விரிவுபடுத்தும் AI Uncrop வசதி இதில் உள்ளது. இது தவிர, புகைப்படங்களை கிராப் செய்ய , சுழற்ற  மற்றும் அதன் வெளிச்சம்,  கான்ட்ராஸ்ட்  போன்றவற்றைச் சரிசெய்யும் பாரம்பரிய எடிட்டிங் கருவிகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

அதிவேக இமேஜ் கன்வெர்ட்டர் 

புகைப்படங்களின் ஃபார்மேட்களை மாற்றுவது பலருக்கு சவாலாக இருக்கும். Imglarger மூலம் Webp, Jpg, Png போன்ற பல்வேறு வடிவங்களுக்கு நொடிகளில் எவ்வித மென்பொருளும் தரவிறக்கம் செய்யாமல் மாற்றிக்கொள்ளலாம். இது 100% இலவசமாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுகிறது.

பயனர் பாதுகாப்பு மற்றும் வசதிகள்

இந்த தளத்தை பயன்படுத்த Account உருவாக்கவோ அல்லது கிரெடிட் கார்டு தகவல்களோ தேவையில்லை. நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் 24 மணிநேரத்திற்கு பிறகு சர்வரிலிருந்து தானாகவே நீக்கப்படும் என்பதால் தரவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் பல படங்களை எடிட் செய்யும் Batch Processing வசதியும் இதில் உள்ளது.

Monica AI: மாடல் எதா இருந்தாலும், மேட்டர் Monica AI தான்! ஒத்த கிளிக்குல உலகமே உங்க முன்னாடி நிக்கும்! "டவுட்னு வந்தா டிக்ஸ்னரி தேவையில்ல, Monica AI ஒருத்தி போதும்...