தொழில்நுட்ப உலகில் ChatGPT ஏற்படுத்திய தாக்கத்தை தொடர்ந்து, தற்போது தேடல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல GPTGO.AI எனும் புதிய தளம் அறிமுகமாகியுள்ளது. இது கூகுளின் அசாத்திய தேடல் வேகத்தையும், சாட் ஜிபிடியின் புத்திசாலித்தனமான பதில்களையும் ஒரே இடத்தில் பயனர்களுக்கு வழங்குகிறது.
GPTGO.AI-ன் தனித்துவமான சிறப்பம்சங்கள்
கூகுள் + சாட் ஜிபிடி (Integrated Search): வழக்கமான தேடுபொறிகளில் தகவல்களை தேடும்போது வெறும் இணையதள முகவரிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், GPTGO-வில் நீங்கள் ஒரு விஷயத்தை தேடினால், கூகுள் முடிவுகளுடன் சேர்த்து, சாட் ஜிபிடி வழங்கும் விரிவான விளக்கமும் அதே பக்கத்தில் தோன்றும்.
கணக்கு தேவையில்லை:
சாட் ஜிபிடியை பயன்படுத்த பொதுவாக மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் GPTGO தளத்தில் எந்தப் பதிவும் இன்றி, பிரீமியம் சாட் ஜிபிடி வசதியை நீங்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம்.
அதிவேக பதில் :
ஒரே கிளிக்கில் துல்லியமான தகவல்களை பெற முடிவதால், பயனர்களின் நேரம் மிச்சமாகிறது. தேடல் முடிவுகளை அப்படியே காப்பி செய்யவோ அல்லது ஆவணமாக பதிவிறக்கம் செய்யவோ வசதிகள் உள்ளன.
அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தலாம்:
கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட் என எந்த சாதனத்திலும், குரோம் அல்லது பயர்பாக்ஸ் போன்ற எந்த பிரவுசரிலும் இதை எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு 'UniChat' என்ற பெயரில் மொபைல் செயலியும் உள்ளது.
தனியுரிமை பாதுகாப்பு :
பயனர்களின் தேடல் விவரங்களையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ இந்த தளம் சேமிப்பதில்லை. இதனால் நீங்கள் பாதுகாப்பாக தகவல்களை தேடலாம்.
எந்தெந்த துறைகளில் பயன்படும்?
கல்வி மற்றும் ஆராய்ச்சி: மாணவர்கள் தங்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு உடனடி விளக்கங்களைப் பெறலாம்.
Content Writing: மின்னஞ்சல்கள் எழுத, கட்டுரைகள் தயாரிக்க மற்றும் புதிய யோசனைகளைப் பெற இது பெரிதும் உதவுகிறது.
பொழுதுபோக்கு: இசை, திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றிய பரிந்துரைகளைத் துல்லியமாகப் பெறலாம்.
இணையதள பயன்பாட்டில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் GPTGO.AI, தகவல்களை தேடும் முறையையே மாற்றி அமைத்துள்ளது.
