Learning studio AI: கற்பிப்பது கலை என்றால், அதை உலகத்தரத்தில் உருவாக்குவது learning studio AI! ஆசிரியரின் கற்பனைக்கு, ஏஐ-ன் வேகம்! கற்றல் இனி எளியது, கற்பிப்பது இனியது!

learning studio ai

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அறிவை பகிர்ந்து கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் ஆன்லைன் வகுப்புகள் மிக முக்கியமான கருவியாக உள்ளன. ஒரு முழுமையான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு பல மணிநேரம், ஏன் பல நாட்கள் கூட தேவைப்படலாம். இந்த சிரமத்தை போக்கும் விதமாக, அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது LearningStudioAI. இது ஒரு பாடத்தை உருவாக்குவதற்கான ஏஐ ஜெனரேட்டர், பில்டர் மற்றும் எஸ்.சி.ஓ.ஆர்.எம் கிரியேட்டர் என அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் செய்து முடிக்கிறது.

பயனுள்ள சிறப்பம்சங்கள்

LearningStudioAI-ன் மிக முக்கியமான வசதி அதன் Guided Creation ஆகும். ஒரு தலைப்பை கொடுத்தால் போதும், அந்த ஏஐ உதவியாளர் பாடத்தின் தலைப்புகளை வரையறுப்பதில் தொடங்கி, வடிவமைப்பு, வினாடி-வினாக்கள் மற்றும் சுருக்கங்கள் என ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு வழிகாட்டும். மேலும், உங்களிடம் ஏற்கனவே உள்ள Word, PDF அல்லது பவர்பாயிண்ட் கோப்புகளை இந்தத் தளத்தில் பதிவேற்றினால், ஏஐ அதை உடனே ஒரு கட்டமைக்கப்பட்ட பாடமாக மாற்றிக்கொடுக்கும். இது ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கடினமான உழைப்பைப் பாதியாகக் குறைக்கிறது.

ஏஐ-ன் மேம்படுத்தப்பட்ட ஆற்றல்

இந்த தளத்தில் உள்ள ஏஐ அசிஸ்டெண்ட் பாடத்தின் தெளிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாடத்தின் சூழலுக்கு ஏற்ப புதிய பகுதிகளை தானாகவே பரிந்துரைத்து, பாடத்திட்டத்தை விரிவுபடுத்தும் வல்லமை கொண்டது. ஒரு பாடத்தை எழுதும்போது, கடினமான விளக்கங்களை சுருக்கவோ, அல்லது வாசிப்பு திறனுக்கு ஏற்ப அதன் நடையை மாற்றவோ Edit with AI என்ற அம்சம் உதவுகிறது. இது ஆசிரியர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மல்டிமீடியா மற்றும் எளிதான பகிர்வு

பாடங்களை வெறும் எழுத்துகளாக மட்டும் வைக்காமல், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் உயர்தர படங்களை இணைத்து மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாற்ற முடியும். YouTube, Vimeo தளங்களிலிருந்து வீடியோக்களை எளிதாக பதிவேற்றலாம். பாடத்தை உருவாக்கி முடித்ததும், வாட்ஸ்அப், லிங்க்ட்இன் அல்லது முகநூல் தளங்களில் ஒரே கிளிக்கில் பகிரலாம். மேலும், இதனை PDF அல்லது SCORM கோப்புகளாக தரவிறக்கம் செய்து, பிற கற்றல் மேலாண்மை அமைப்புகளில் பதிவேற்றவும் முடியும்.

யார் பயன்படுத்தலாம்?

இந்த தளம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆன்லைன் மூலம் பாடங்களை விற்பனை செய்யும் கல்வி தொழில்முனைவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நிறுவனங்களில் புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது அல்லது விதிகளை பின்பற்றுவது தொடர்பான பாடங்களை விரைவாகவும் தொழில்முறை தரத்தோடும் உருவாக்க இது உதவுகிறது. கல்வி என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை, தொழில்நுட்பத்தின் மூலம் LearningStudioAI வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

Odin AI : இது வெறும் மென்பொருள் அல்ல, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் டிஜிட்டல் வேகம்! Odin AI ஏஜென்ட்கள் இருக்க, வேலைகள் இனி தானாகவே நடக்கும்!