Timely AI: நமக்கு தெரியாம நம்ம நேரம் எங்க போகுதுன்னு தெரியலன்னா... நம்ம கையை விட்டு வெற்றி விலகிடும்.. கடிகார முள்ளு ஓடுறதை விட, நீ செய்யுற வேலை துல்லியமா இருக்கணும்... அதுக்கு Timely AI துணையா இருக்கணும்!

timely ai

இன்றைய வேகமான கார்ப்பரேட் உலகில், ஊழியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் நேர கணக்கிடுவது ஒரு சவாலான காரியமாகும். கைமுறையாக நேரத்தை கணக்கிடும்போது ஏற்படும் தவறுகள், வணிகத்தின் லாபத்தையும் உற்பத்தித்திறனையும் பாதிக்கின்றன. இந்த சிக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது 'Timely' AI மென்பொருள். இது ஊழியர்கள் தாங்கள் செலவிடும் நேரத்தை குறித்து வைப்பதற்கு பதிலாக, தானாகவே அதை கண்காணித்து ஆவணப்படுத்துகிறது.

Auto-Capture & Memory Tracker : பாரம்பரிய நேர கண்காணிப்பு மென்பொருள்களில் நாம் வேலையை தொடங்கும்போதும் முடிக்கும்போதும் 'டைமரை' ஆன்/ஆஃப் செய்ய வேண்டும். ஆனால், Timely-ல் உள்ள 'Memory Tracker' வசதி, நீங்கள் கணினியில் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பின்னணியில் தானாகவே பதிவு செய்கிறது. இதனால் ஒரு நிமிடம் கூட கணக்கில் வராமல் போகாது. ஊழியர்கள் டைமரை நிறுத்த மறந்துவிட்டோமே என்ற கவலையின்றி தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியும்.

AI Timesheets: பதிவு செய்யப்பட்ட தரவுகளை AI தொழில்நுட்பம் தானாகவே வகைப்படுத்தி திட்டங்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ  ஒதுக்குகிறது. ஊழியர்கள் செய்ய வேண்டியதெல்லாம், AI உருவாக்கிய அந்த டைம்ஷீட்டை ஒருமுறை சரிபார்த்து 'அப்ரூவ்' செய்வது மட்டும்தான். கைமுறையாக தரவுகளை உள்ளீடு செய்யும் நேரத்தை குறைப்பதன் மூலம், நிறுவனத்தின் நிர்வாக செலவுகள் குறைகின்றன.

Privacy-First Design : Timely AI 'ஸ்பைவேர்' கிடையாது. இது ஊழியர்களை கண்காணிப்பதை விட, அவர்களுக்கு உதவுவதையே நோக்கமாக கொண்டுள்ளது. இதில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதோ அல்லது விசைப்பலகை அழுத்தங்களை கண்காணிப்பதோ கிடையாது. பதிவு செய்யப்பட்ட காலவரிசை ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும்; அவர்கள் அனுமதிக்கும் தகவல்கள் மட்டுமே மேலாளர்களுக்கு பகிரப்படும்.

வணிக நன்மைகள்

லாப அதிகரிப்பு: ஒவ்வொரு பில் செய்யக்கூடிய நேரமும் துல்லியமாக பதிவு செய்யப்படுவதால் வருவாய் அதிகரிக்கிறது.

உற்பத்தித்திறன்: நேரத்தை வீணாக்கும் தேவையற்ற வேலைகளை கண்டறிந்து அவற்றை நீக்க உதவுகிறது.

ஊழியர் நலம்: அதிகப்படியான வேலைப்பளுவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஊழியர்கள் மனச்சோர்வு அடைவதை தடுக்கிறது.

5,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்களால் நம்பப்படும் Timely AI , நேர மேலாண்மையை எளிதாக்கி உற்பத்தித்திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

Jenni AI: நீங்கள் ஒரு ஆராய்ச்சி மாணவரா? உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது தான் Jenni AI..