இன்றைய டிஜிட்டல் உலகில், மக்களின் கவனம் மிகக் குறுகிய காலமே நீடிக்கிறது. அதனால்தான் யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் போன்ற குறுகிய வடிவ வீடியோக்கள் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், மணி கணக்கில் இருக்கும் ஒரு நீண்ட வீடியோவில் இருந்து மிகச்சிறந்த பகுதிகளை கண்டறிந்து, அதை எடிட் செய்வது ஒரு சாதாரண விஷயமல்ல. இந்த கடினமான வேலையை வெறும் ஒரு சில நொடிகளில் செய்து முடிக்க வந்துவிட்டது Klap AI.
Klap AI என்றால் என்ன?
Klap AI என்பது ஒரு அதிநவீன AI தொழில்நுட்பத்தால் இயங்கும் வீடியோ எடிட்டிங் தளமாகும். இது உங்களுடைய யூடியூப் வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் அல்லது எந்தவொரு நீண்ட வீடியோவையும் தானாகவே கண்டறிந்து, சமூக ஊடகங்களில் வைரலாக கூடிய குட்டி குட்டி கிளிப்ஸாக மாற்றி கொடுக்கிறது.
Klap AI மூலம் நீங்கள் என்னென்ன உருவாக்கலாம்?
இந்த தளம் பல்வேறு வகையான சமூக ஊடக வடிவங்களுக்கு ஏற்ப வீடியோக்களை பிரத்யேகமாக வடிவமைக்கிறது:
Viral Shorts: நீண்ட வீடியோக்களை பகுப்பாய்வு செய்து, மக்கள் அதிகம் ரசிக்கக்கூடிய சிறந்த பகுதிகளை மட்டும் தனியாக பிரித்து வைரல் வீடியோக்களாக மாற்றுகிறது.
Instagram Reels: இன்ஸ்டாகிராம் பயனர்களை கவரும் வகையில், அதிக வியூஸ்களை பெறக்கூடிய ரீல்ஸ்களை உருவாக்குகிறது.
TikTok Videos: டிக் டாக் தளத்தின் அல்காரிதத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக மேம்படுத்தப்பட்ட கிளிப்களை வழங்குகிறது.
YouTube Clips: நீண்ட வீடியோக்களில் இருந்து பவர்புல்லான ஹைலைட்ஸ் பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து உங்கள் ரீச்சை அதிகரிக்கிறது.
Podcast Clips: ஆடியோ மற்றும் வீடியோ பாட்காஸ்ட்களில் உள்ள சுவாரசியமான உரையாடல்களை மட்டும் கண்டறிந்து, பகிரக்கூடிய ஹைலைட்களாக மாற்றுகிறது.
Marketing Content: பிராண்டுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் உயர்தர வீடியோக்களை வழங்குகிறது.
Klap AI-ன் முக்கிய சிறப்பம்சங்கள்
AI Powered : இதில் உள்ள ஸ்மார்ட் எடிட்டிங் வசதி உங்களின் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
Viral Clips : வீடியோவில் எந்தப் பகுதி மக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பதை AI-யே துல்லியமாகக் கண்டறிகிறது.
Save Hours : நீங்கள் Manualஆக எடிட் செய்ய எடுக்கும் மணி நேர கணக்கிலான வேலையை, இது வெறும் சில நொடிகளில் செய்து முடிக்கிறது.
Grow Faster : குறைந்த நேரத்தில் அதிக உள்ளடக்கங்களை உருவாக்குவதன் மூலம் உங்களது சமூக ஊடகப் பக்கங்களை வேகமாக வளர்க்க முடியும்.
Content Creators மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டர்களுக்கு Klap AI ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். குறைவான உழைப்பில், நிறைவான மற்றும் வைரலாக கூடிய வீடியோக்களை உருவாக்க இன்றே Klap AI-யை பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுங்கள்!
