இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அலுவலக கூட்டங்கள் முதல் வாடிக்கையாளர் சேவை வரை அனைத்தும் ஆன்லைன்மயமாகிவிட்டன. இத்தகைய ஆன்லைன் கலந்துரையாடல்களின் போது ஏற்படும் பின்னணி இரைச்சல்கள் பெரும் இடையூறாக அமைகின்றன. இந்த சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வாகவும், ஆன்லைன் கூட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் உருவாகி உலக புகழ்பெற்றிருப்பதுதான் Krisp குரல் செயற்கை நுண்ணறிவு செயலியாகும். இதன் அசாத்திய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் காண்போம்.
மூன்று நிலைகளில் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் ஏஐ
ஒரு ஆன்லைன் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே Krisp AI செயலியின் AI Agent வேலை செய்ய தொடங்கிவிடுகிறது. முந்தைய உரையாடல்களின் அடிப்படையில் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை இதுவே பரிந்துரைக்கிறது. கூட்டம் நடக்கும் போது, தேவையற்ற இரைச்சல்களை நீக்குவதுடன், உடனுக்குடன் துல்லியமான டிரான்ஸ்கிரிப்டுகளை வழங்குகிறது. கூட்டம் நிறைவடைந்தவுடன், ஒட்டுமொத்த பேச்சின் சுருக்கம் முக்கிய முடிவுகள் மற்றும் அடுத்தகட்டப் பணிகள் ஆகியவற்றைத் தானாகவே தயாரித்து வழங்கி அசத்துகிறது.
சத்தமில்லாத உரையாடல்: உலகத்தரம் வாய்ந்த இரைச்சல் நீக்கம்
ஆன்லைன் மீட்டிங்குகளில் Krisp AI செயலி இவ்வளவு பிரபலமடைந்ததற்கு அதன் நம்பர் 1 ஏஐ இரைச்சல் நீக்கத் தொழில்நுட்பமே முக்கிய காரணமாகும். வீட்டில் குழந்தைகள் கத்தும் சத்தம், தெருவில் வாகனங்கள் செல்லும் சத்தம், அல்லது அருகில் நாய் குறைக்கும் சத்தம் என எந்தவொரு பின்னணி இரைச்சலாக இருந்தாலும், அதை முழுமையாக நீக்கி உங்களது குரலை தெளிவாக கேட்க வைக்கிறது. இவற்றுடன் எதிரொலி மற்றும் பிறர் பேசும் குறுக்கீடுகளையும் இது அசுர வேகத்தில் கட்டுப்படுத்துகிறது.
உச்சரிப்பு மாற்றம் மற்றும் பன்மொழி ஆதரவு
உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு உச்சரிப்பு வேறுபாடு ஒரு பெரிய சவாலாக இருக்கும். Krisp AI செயலி, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு நாட்டு மக்களின் உச்சரிப்புகளை எளிதில் புரியும் வகையில் மாற்றி , தெளிவான தொடர்பாடலுக்கு வழிவகை செய்கிறது. மேலும், சர்வதேசக் குழுக்கள் தங்களுக்குள் தடையின்றிப் பேசிக்கொள்ளும் வகையில் சுமார் 16 மொழிகளில் டிரான்ஸ்கிரிப்டுகளையும் மீட்டிங் சுருக்கங்களையும் வழங்கும் பன்மொழி ஆதரவையும் இது கொண்டுள்ளது.
CRM இணக்கப்பாடு மற்றும் எளிதான பகிர்வு
கிரிஸ்ப் செயலி வெறும் குறிப்புகளை மட்டும் எடுப்பதில்லை; அவற்றை உங்களது அன்றாட வேலைக்கான மென்பொருட்களுடன் எளிதாக இணைக்கிறது. கூட்டத்தின் குறிப்புகள் மற்றும் ஆக்ஷன் ஐட்டம்களை நேரடியாக சேல்ஸ்ஃபோர்ஸ், ஹப்ஸ்பாட் , ஸ்லாக் போன்ற சிஆர்எம் கருவிகளுக்குத் தானாகவே அனுப்பி விடுகிறது. இதனால், நேரடி ஆன்லைன் மீட்டிங்குகள் மட்டுமின்றி, மொபைல் ஆப் மூலம் நேரில் நடக்கும் கலந்துரையாடல்களையும் எளிதாகப் பதிவு செய்து, ஒரே கிளிக்கில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
நிறுவன தரத்திலான பாதுகாப்பு மற்றும் சான்றிதழ்கள்
பயனாளர்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கிரிஸ்ப் நிறுவனம் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல பாதுகாப்புச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
கிரிஸ்ப் செயலி யாருக்கெல்லாம் பயன்படும்?
அலுவலகக் கூட்டங்களுக்கு : வீட்டில் இருந்தோ அல்லது பயணங்களிலோ வேலை செய்யும் ஊழியர்களின் மீட்டிங் குறிப்புகளை எடுக்க உதவுகிறது.
கால் சென்டர்களுக்கு : வாடிக்கையாளர்களுடன் பேசும் போது பின்னணிச் சத்தமில்லாத, தெளிவான குரல் மொழிபெயர்ப்பை வழங்குகிறது.
மென்பொருள் உருவாக்குநர்களுக்கு ள் இதன் வாய்ஸ் ஐசோலேஷன் எஸ்டிகே மூலம் தங்களது சொந்த செயலிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
