AI Image Caption Generator: கேப்ஷன் எழுத எனக்கு வார்த்தை தேவையில்லை... என் கண்ணுல இருக்குற பவரே உன்னை கமெண்ட் பண்ண வச்சிடும்! போட்டோவப் பார்த்து என் கெத்தை கணிக்காதே தம்பி... அது வெறும் பிரேம்! உள்ளே இருக்குற என் அஸ்திவாரமே வேற!

ai image caption generator


இணையத்தில் புகைப்படங்களை பகிர்வது இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு சிறந்த புகைப்படத்தை பதிவிடும்போது, அதற்குப் பொருத்தமான, சுவாரசியமான ஒரு தலைப்பு இருந்தால் மட்டுமே அது பலரையும் சென்றடையும். உங்களுடைய புகைப்படங்களுக்கு நொடியில் அட்டகாசமான கேப்ஷன்களை உருவாக்க உதவும் ஒரு அருமையான இலவச கருவிதான் AI Image Caption Generator.

இந்த கருவியைப் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் நாம் பதிவிடும் புகைப்படங்களுக்கு கீழே எழுதப்படும் 'கேப்ஷன்' எனப்படும் தலைப்புகள், அந்த பதிவின் வெற்றியை தீர்மானிக்கின்றன. ஒரு சுவாரசியமான கேப்ஷன் மட்டுமே பார்ப்பவர்களை லைக் செய்யவோ, கமெண்ட் செய்யவோ தூண்டும். ஆனால், ஒவ்வொரு முறை புகைப்படம் பதிவிடும்போதும் "இதற்கு என்ன கேப்ஷன் எழுதலாம்?" என்று யோசிப்பது பலருக்கும் தலைவலியான விஷயம். இந்த தலைவலியைத் தீர்க்கவே AI)தொழில்நுட்பத்துடன் கூடிய 'Image Caption Generator' உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் மற்றும் லாகின் செய்யாமலேயே பயன்படுத்தக்கூடியது.

இது எவ்வாறு செயல்படுகிறது?

இந்த AI கருவியை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நீங்கள் வெறும் நான்கு எளிய படிகளில் உங்களுக்கான கேப்ஷனை பெற்றுவிடலாம்:

புகைப்படத்தை பதிவேற்றவும் : நீங்கள் கேப்ஷன் உருவாக்க விரும்பும் புகைப்படத்தை இதில் அப்லோட் செய்ய வேண்டும் அல்லது டிராக் அண்ட் டிராப்  செய்யலாம்.

தொனியைத் தேர்ந்தெடுக்கவும் : உங்கள் புகைப்படம் எந்த மாதிரியான சூழலை கொண்டது (மகிழ்ச்சி, உத்வேகம், நகைச்சுவை, தொழில்முறை) என்பதை பொறுத்து அதற்கான தொனியை தேர்வு செய்யலாம்.

கூடுதல் விவரங்கள் : புகைப்படத்தைப் பற்றி AI-க்கு கூடுதல் தகவல் ஏதேனும் சொல்ல விரும்பினால், அதை சுருக்கமாக உள்ளிடலாம்.

கேப்ஷனைப் பெறுக): இறுதியாக 'Convert' பொத்தானை அழுத்தினால், AI உங்கள் புகைப்படத்தை ஆராய்ந்து பலவிதமான கேப்ஷன் ஐடியாக்களை நொடியில் வழங்கும். உங்களுக்குப் பிடித்ததை அப்படியே காப்பி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமூக ஊடக மேலாண்மைக்கு இது எவ்வாறு உதவுகிறது?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், லிங்க்டின் பதிவுகள் அல்லது எக்ஸ் தள பதிவுகள் என எதுவாக இருந்தாலும், இந்தக் கருவி உங்கள் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துகிறது. குறிப்பாக, பிராண்டுகளை நடத்துவோர் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் தினசரி உள்ளடக்கங்களை திட்டமிட  இது பெரிதும் உதவுகிறது. துல்லியமான மற்றும் ஈர்க்கக்கூடிய தலைப்புகள் மூலம் உங்கள் கணக்கின் ரீச் மற்றும் எங்கேஜ்மென்ட் அதிகரிக்கும்.

புகைப்பட கேப்ஷன்கள் புகைப்படத்தில் உள்ளதை அப்படியே விவரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. Alt Text என்பது புகைப்படத்தை அப்படியே விவரிப்பதற்காக பயன்படுவது. ஆனால், கேப்ஷன் என்பது அந்த புகைப்படத்தின் பின்னணி, உணர்வு, அல்லது ஒரு கதையை சுவாரசியமாகச் சொல்வதாக இருக்க வேண்டும்.

இதேபோன்று உங்களின் டிஜிட்டல் வேலைகளை எளிதாக்க இன்னும் சில பயனுள்ள AI கருவிகளும் கிடைக்கின்றன:

Brandmark AI: டிசைனிங் சாஃப்ட்வேரை தொட்டு, பிளாங்க் ஸ்கிரீனை பார்த்து பயந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சு! இது Brandmark AI காலம்... பேரை தட்டுனா, பிராண்ட் லோகோ சும்மா பறந்து வந்து விழும்!