Voicemod AI: நான் எப்படிப் பேசுவேன்னு என் மைக்குக்கே தெரியாது... ஏன்னா என் பின்னாடி இருக்கிறது Voicemod மாஸ் காம்போ.. குரல் ஒன்னுதான்... ஆனா கெட்டப் நூறு! இனிமே வாசிப்புல இருந்து ஆர்மி ரேடியோ வரைக்கும்... வாய்ஸ்மாட் ஆன் ஆனா கேமிங் உலகமே அதிரும்

 

voicemod

இன்றைய டிஜிட்டல் உலகில் கேமிங், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் நண்பர்களுடன் ஆன்லைனில் உரையாடுவது ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. உங்களின் சாதாரண குரலை முற்றிலும் வித்தியாசமான, சுவாரசியமான குரலாக மாற்றி காட்டினால் எப்படி இருக்கும்? அதற்கு பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருள்தான் Voicemod. இது நிகழ்நேரத்தில்  உங்கள் குரலை மாற்றி அமைக்கும் உலகின் முன்னணி AI குரல் மாற்றி மற்றும் சவுண்ட்போர்டு தொழில்நுட்பமாகும்.

வாய்ஸ்மாட் எப்படி வேலை செய்கிறது?

வாய்ஸ்மாட் மென்பொருளை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இதன் செயல்பாடுகள் மூன்று எளிய படிகளில் அடங்கும்:

Virtual Microphone: இந்த மென்பொருளை உங்கள் கணினி அல்லது மொபைலில் தரவிறக்கம் செய்தவுடன், இது ஒரு ' மைக்ரோஃபோனை' உருவாக்குகிறது. இது உங்கள் சாதாரண மைக்கின் திறனை பல மடங்கு மேம்படுத்துகிறது.

Set Up: நீங்கள் பயன்படுத்தும் டிஸ்கார்ட் , கேம் சாட் அல்லது ஸ்ட்ரீமிங் ஆப்களில் Input Device 'Voicemod Virtual Microphone' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

குரல் மாற்றம்: இப்போது உங்களுக்குப் பிடித்த குரலையோ அல்லது சவுண்ட் மீம்களையோ தேர்ந்தெடுத்து பேச தொடங்கலாம்.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்

200+ AI குரல்கள்: அனிமே கார்ட்டூன் கதாபாத்திரங்கள் முதல் மிலிட்டரி ரேடியோ குரல்கள் வரை 200-க்கும் மேற்பட்ட குரல் ஃபில்டர்கள் இதில் உள்ளன.

அதிநவீன சவுண்ட்போர்டு: ஆன்லைன் சாட்டிங்கின் போது காமெடி சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் மீம்களை ஒரே கிளிக்கில் ஒலிக்கச் செய்யலாம்.

குறைந்த தாமத நேரம் : கேமர்கள் மற்றும் ஸ்ட்ரீமர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் பேசும் அதே நொடியில் குரல் மாறி ஒலிக்கும்; சிஸ்டம் வேகம் குறையாது.

Voicelab: உங்களுக்குத் தேவையான பிரத்யேக குரலை நீங்களே எக்கோ, ரிவெர்ப் மற்றும் ரோபோடிஃபையர் போன்ற எஃபெக்ட்களைக் கலந்து உருவாக்கிக் கொள்ளலாம்.

Voicemod Key: மொபைல் மற்றும் டெஸ்க்டாப் மட்டுமின்றி, பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற கேமிங் கன்சோல்களிலும் இதை இணைத்துப் பயன்படுத்தலாம்.

இதை பயன்படுத்தும் தளங்கள்

வாய்ஸ்மாட் மென்பொருள் நீங்கள் ஆன்லைனில் உலாவும் அனைத்து முக்கிய தளங்களிலும் தடையின்றி வேலை செய்யும். குறிப்பாக:

டிஸ்கார்ட் 

பப்ஜி, ஃப்ரீ ஃபையர் போன்ற இன்-கேம் வாய்ஸ் சாட்டுகள்

யூடியூப் மற்றும் ட்விட்ச் லைவ் ஸ்ட்ரீமிங் தளங்கள்.

LogoAi: ஒரு கம்பெனிக்கு பேரு வைக்கிறது முக்கியம் இல்ல... அந்த பேரை மக்கள் மனசுல பதிய வைக்கிற ஒரு 'லோகோ' தான் முக்கியம்! காசு கொடுத்து டிசைனரை தேடி அலைஞ்ச காலம் முடிஞ்சு போச்சு... இப்போ ஏஐ ஸ்கெட்ச் போட்டா, பிராண்ட் உலகத்தையே அதிர வைக்கலாம்!"