Elicit AI: தேடல் கசக்கும் என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது... இனி ஆராய்ச்சி என்பது தேடல் அல்ல, Elicit AI மூலம் கிடைக்கும் துல்லியமான தீர்வு! லட்சக்கணக்கான கட்டுரைகளுக்கு இடையே அலைய வேண்டிய அவசியம் இல்லை... Elicit இருக்க, ஆராய்ச்சி இனி சில நொடிகளில்

elicit

இன்றைய வேகமான உலகில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இந்த சூழலில், லட்சக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து நமக்குத் தேவையான தகவல்களைச் சில நொடிகளில் கண்டறிந்து, துல்லியமான ஆராய்ச்சி அறிக்கைகளைத் தயாரிப்பது ஒரு சவாலான காரியமாகும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக வந்திருக்கும் நவீன AI கருவிதான் Elicit. உலகெங்கிலும் உள்ள 5 மில்லியனுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படும் இந்தக் கருவி, அறிவியல் ஆராய்ச்சியை 10 மடங்கு எளிமையாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் மாற்ற உதவுகிறது.

எலிசிட் கருவியின் தனித்துவமான அம்சங்கள்

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணிகளை தொடக்கத்திலிருந்து இறுதி வரை திறம்பட மேற்கொள்ள எலிசிட் பல்வேறு வசதிகளை வழங்குகிறது:

அதிநவீன தேடல் : Elicit AI 138 மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 5,45,000 மருத்துவ சோதனைகளைத் தேடும் வசதியைக் கொண்டுள்ளது. இதன் Semantic Search தொழில்நுட்பம், சரியான கீவேர்டுகள் தெரியவில்லை என்றாலும் தொடர்புடைய முடிவுகளை வழங்குகிறது.

ஆராய்ச்சி அறிக்கைகள் : முறையாக வகைப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை இது சில நொடிகளில் உருவாக்கித் தருகிறது. மற்ற AI கருவிகளை போலன்றி, இதில் உள்ள அறிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு ஏற்ப முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

முறையான இலக்கிய ஆய்வு: முறையான இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எலிசிட் சிறந்த உதவியாக உள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நேரத்தை 80% வரை சேமிக்க முடிகிறது.

தரவு பாதுகாப்பு மற்றும் அறிவிப்புகள் : ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த ஆதாரங்களை சேமித்து வைத்து எதிர்கால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய ஆராய்ச்சிகள் குறித்து உடனுக்குடன் அறிய 'அலர்ட்' வசதியையும் பயன்படுத்தலாம்.

ஏன் Elicit AI மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது?

சந்தையில் பல AI கருவிகள் இருந்தாலும், Elicit AI அதன் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக பாராட்டப்படுகிறது. இது ஒரே நேரத்தில் 1,000 தொடர்புடைய கட்டுரைகளை கண்டறிந்து, 20,000 தரவு புள்ளிகளைப் பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது. மேலும், இது வழங்கும் ஒவ்வொரு தகவலுக்கும் அந்தந்த மூலங்களிலிருந்து வாக்கிய அளவிலான ஆதாரங்களை வழங்குவது இதன் மிகப்பெரிய பலம்.

பல்வேறு துறைகளில் எலிசிட்டின் பயன்பாடு

அறிவியல் உலகம் முழுவதும் எலிசிட் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, Pharmaceuticals, கல்வித்துறை , மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அரசு கொள்கை உருவாக்கம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணிகளை விரைவுபடுத்த இதைப் பயன்படுத்துகின்றனர். பிஆர்ஐஎஸ்எம்ஏ 2020  வழிகாட்டுதல்களின்படி முறையான ஆய்வு மேற்கொள்ள எலிசிட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Remini AI: போட்டோஷாப்ல மணிக்கணக்கா உக்காந்து பிக்சல் பிக்சலா தேய்ச்ச காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு தம்பி! இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு... அப்லோட் பண்ணிட்டு ஒரே ஒரு பட்டனை தட்டுனா போதும், பிளர் ஆன உன் பழைய சிங்கம் சிங்கிள் கிளிக்குல ஷார்ப்பான எச்டி சிங்கமா மாறி நிக்கும். Remini AI ஆட்டம் ஆரம்பிச்சாச்சு... தூசு தட்டி கெத்தா வா!"