இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட தொழில்நுட்ப கட்டுரைகள், சட்ட ஆவணங்கள் அல்லது நிறுவன அறிக்கைகளை முழுமையாக படித்து புரிந்துகொள்வது என்பது மனிதர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சிக்கலுக்கு மிகச்சிறந்த தீர்வாக உருவெடுத்துள்ளது Humata AI. கூகுளின் Gradient Ventures உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 3.5 மில்லியன் டாலர் நிதியுதவி பெற்றுள்ள இந்தத் தளம், பிடிஎஃப் கோப்புகளுக்கான 'சாட்ஜிபிடி' போல செயல்படுகிறது.
Humata AI-ன் அசாத்திய அம்சங்கள்
வரம்பற்ற கோப்புகள் மற்றும் உடனடி பதில்கள்): நீங்கள் எத்தனை ஆவணங்களை வேண்டுமானாலும் இதில் பதிவேற்றலாம். மனிதர்கள் படித்து முடிக்க நாட்களாகும் பெரிய கோப்புகளை, இது ஒரு சில நொடிகளில் படித்து முடித்து, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
துல்லியமான ஆதாரக் குறிப்புகள் : ஏஐ வழங்கும் பதில்கள் எந்த பக்கத்தில், எந்த வரியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதார இணைப்புகளை இது துல்லியமாக காட்டுகிறது. இதனால் இந்தத் தரவுகளை நாம் அப்படியே நம்பலாம்.
வலைப்பக்கங்களில் இணைக்கும் வசதி : நிறுவனங்கள் தங்களின் ஆவணங்களை இந்த Humata AI மூலம் தங்களின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கங்களில் ஒரே கிளிக்கில் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை ஆவணங்களில் இருந்து எளிதாகப் பெறலாம்.
நிறுவனங்களுக்கான கட்டுக்கோப்பான பாதுகாப்பு: பயனர்களின் தரவு பாதுகாப்பிற்கு Humata AI நிறுவனம் மிக உயர்ந்த முக்கியத்துவத்தை வழங்குகிறது.
மறையாக்கப்பட்ட தரவுகள்: நீங்கள் பதிவேற்றும் கோப்புகள் அனைத்தும் '256-bit SHA' தொழில்நுட்பம் மூலம் உடனடியாக Encrypted பாதுகாக்கப்படுகிறது.
பயனர் கட்டுப்பாடுகள்: உங்கள் குழுவில் உள்ள யார் யாரெல்லாம் இந்த ஆவணங்களைப்பார்க்க வேண்டும், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற அதிகாரத்தை நீங்களே கட்டுப்படுத்த முடியும்.
பாதுகாப்பான கிளவுட் வசதி : உங்கள் நிறுவனத் தரவுகள் உங்கள் குழுவிற்குள் மட்டுமே இருக்கும். வெளிநபர்கள் யாரும் இதை அணுக முடியாது.
விலைப் பட்டியல்:
இலவசத் திட்டம் : ஏஐ தொழில்நுட்பத்தை ஆரம்பக்கட்டத்தில் சோதிக்க நினைப்போருக்கு இது ஏற்றது. இதில் 60 பக்கங்கள் வரை பதிவேற்றலாம் மற்றும் 10 கேள்விகளுக்கு பதில்களை பெறலாம்.
எக்ஸ்பர்ட் திட்டம் : ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஏற்றது. 3 பயனர்கள் வரை பயன்படுத்தலாம். 500 பக்கங்கள் வரை இலவசம் (கூடுதல் பக்கங்களுக்குப் பக்கம் ஒன்றிற்கு $0.02 மட்டுமே).
டீம் திட்டம் : நிறுவனங்களுக்கானது. 10 பயனர்கள் வரை அனுமதி, 5,000 பக்கங்கள் வரை இலவசம். மேலும் இதில் ஸ்கேன் செய்யப்பட்ட உரைகளைப் படிக்கும் 'OCR' வசதியும், பிரீமியம் சாட் சப்போர்ட்டும் உள்ளது.
HFS Research நிறுவனத்தின் சிஇஓ பில் ஃபெர்ஷ்ட் மற்றும் UC Irvine பல்கலைக்கழக பேராசிரியர் இயன் ஸ்ட்ரான் போன்ற பல முன்னணி வல்லுநர்கள், ஹியூமட்டா ஏஐ தங்களின் ஆராய்ச்சி மற்றும் கல்வி முறையையே முழுமையாக மாற்றியமைத்து, வேலை திறனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பாராட்டியுள்ளனர்.
