உலகம் முழுவதும் தற்போது AI தொழில்நுட்பம் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மாணவர்கள் பலரும் AI சார்ந்த படிப்புகளை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தகுந்தாற்போல், பல்வேறு கல்வி நிறுவனங்களும் AI தொடர்பான புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முதல் AI சார்ந்த கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அதாவது AI-led Computer Science program என்ற படிப்பை ‘அல்டா ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’ என்ற பெயரில் சன்ஸ்டோன் நிறுவனம் அதிரடியாக தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக உருவெடுக்கின்றனர். இருப்பினும், அவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே AI மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இந்த பெரும் திறன் இடைவெளியை குறைப்பதையும், மாணவர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு சன்ஸ்டோன் நிறுவனம் இந்த புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது சாதாரண கல்வி முறையை போல வெறும் Theory வகுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், மாணவர்கள் சேர்ந்த முதல் நாளிலிருந்தே Practical Projects செய்ய முன்னுரிமை அளிக்கிறது. மாணவர்கள் முதல் நாளிலிருந்தே அதிநவீன கருவிகளை இயக்குவது குறித்த பயிற்சிகளை பெறுவார்கள். மேலும், உலகப் புகழ்பெற்ற GPT, Claude, Gemini உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட AI கருவிகளை பயன்படுத்த மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க மெட்டா, அமேசான், ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அவ்வப்போது நேரடி வகுப்புகளை எடுப்பார்கள். இதன் மூலம், தொழில்துறையில் தற்போது என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய நேரடி பயிற்சி மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இந்த திட்டத்தில் பயிலும் மாணவர்கள், தங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே 20-க்கும் மேற்பட்ட Real-time Projects உருவாக்கி முடித்திருப்பார்கள். இதனால் அவர்கள் பெறும் சான்றிதழ் என்பது வெறும் காகிதமாக இல்லாமல், அவர்களின் அனுபவத்தையும் திறமையையும் பறைசாற்றும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் போல அமையும். ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் 100 சதவீதம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் AI பொறியாளர்களின் தேவை அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்த முயற்சியை தொடங்கியுள்ளதாக அல்டா நிறுவனத்தின் நிறுவனர் ஆஷிஷ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.
