இன்றைய டிஜிட்டல் உலகில் PDF என்பது அனைவருக்குமே ஒரு இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டது. மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களது முக்கியமான கோப்புகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள PDF வடிவத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில், PDF தொடர்பான வேலைகளை மிகவும் எளிமையாக்கும் ஒரு சிறப்பான AI கருவியை பற்றி இங்கே காண்போம். அதுதான் LightPDF. இது ஒரு முழுமையான PDF மேலாண்மை தளமாக செயல்படுகிறது.
AI தொழில்நுட்பத்தின் அபார ஆற்றல்
இதில் இணைந்துள்ள AI தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் கருவியை கோப்பை பதிவேற்றி, அதில் உள்ள தகவல்கள் குறித்து நீங்கள் கேள்விகளை எழுப்பலாம். நீண்ட பக்கங்களை கொண்ட கோப்புகளை சுருக்கி தர சொல்லவோ அல்லது அதில் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக விளக்க சொல்லவோ இந்த AI கருவி பெரிதும் உதவி செய்கிறது.
வேர்டு கோப்பை போலவே எடிட்டிங் வசதி
LightPDF தளத்தை பயன்படுத்தி, ஒரு வேர்டு கோப்பை மாற்றுவது போலவே PDFல் உள்ள எழுத்துக்கள், படங்கள் மற்றும் லிங்குகளை மிக எளிதாக மாற்றியமைக்கலாம். இது தவிர, கோப்புகளில் வாட்டர்மார்க் சேர்ப்பது அல்லது ஏற்கனவே உள்ளவற்றை நீக்குவது போன்ற வசதிகளும் இதில் உள்ளன. ஸ்கேன் செய்யப்பட்ட PDF அல்லது புகைப்படங்களில் உள்ள எழுத்துக்களை துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை எடிட் செய்யக்கூடிய டெக்ஸ்ட் கோப்பாக மாற்றும் OCR வசதி இதன் கூடுதல் சிறப்பாகும்.
தரமான கோப்பு மாற்றம்
PDF கோப்புகளை வேர்டு, எக்செல், பிபிடி போன்ற பிற வடிவங்களுக்கு மாற்றும்போது அதன் தரம் குறையாமல் இருப்பதை LightPDF உறுதி செய்கிறது. இது விண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என அனைத்து வகையான சாதனங்களிலும் தடையின்றி வேலை செய்யும். மேலும், இதில் கிளவுட் வசதி இருப்பதால், நீங்கள் ஒரு சாதனத்தில் செய்யும் மாற்றங்களை மற்றொரு சாதனத்தில் உடனுக்குடன் தொடர முடியும்.
உயர்தர பாதுகாப்பு மற்றும் டெவலப்பர் வசதி
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு இந்த தளம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. உங்கள் கோப்புகள் பாதுகாப்பாக கையாளப்படுவதோடு, தேவையற்ற தரவு சேகரிப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், மென்பொருள் உருவாக்குநர்களுக்காக இதற்கெனத் தனிப்பட்ட API மற்றும் SDK வசதிகளையும் இது வழங்குகிறது. இது பிசினஸ் ரீதியாக பயன்படுத்துவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
அடோப் மென்பொருளுக்குச் சிறந்த மாற்று
Adobe Acrobat போன்ற விலை உயர்ந்த சாப்ட்வேர்களுக்குப் பதிலாக, மலிவான மற்றும் எளிமையான ஒரு தளத்தை தேடுபவர்களுக்கு LightPDF ஒரு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள 25-க்கும் மேற்பட்ட இலவச ஆன்லைன் கருவிகள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை துரிதப்படுத்தும். முற்றிலும் எளிமையான அம்சங்கள் கொண்ட இந்த இலவச தளம், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு பயனுள்ள கருவியாகும்.
