Synthesia AI : கேமரா தேவையில்லை, லைட்டிங் தேவையில்லை, ஏன்… நடிக்க ஆளே தேவையில்லை! ஸ்கிரிப்ட் கொடுத்தா போதும், Synthesia AI வீடியோவை அள்ளித் தரும்!



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வீடியோ எடுக்க வேண்டும் என்றால் வீடியோ கேமரா, நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எடிட்டர்கள் என ஒரு பெரிய குழுவே வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது AI தொழில்நுட்பம் வந்த பிறகு, எந்தவிதமான விலையுயர்ந்த சாதனங்களும் இல்லாமல், ஒரு சில Promptsகளை கொடுப்பதன் மூலமே நாம் நினைத்ததை விட மேலான தரத்தில் ஒரு வீடியோவை பெற்றுவிட முடியும். அந்த வகையில் வீடியோ உருவாக்கும் AIகருவிகளில் மிக முக்கியமானது Synthesia AI ஆகும்.


டிஜிட்டல் மனிதர்களின் அதிரடி வருகை


Synthesia AI என்பது ஒரு வீடியோ உருவாக்கத் தளமாகும். இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மனிதர்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குகிறது. நீங்கள் கொடுக்கும் உரையை இந்த Synthesia AI அவதார்களை நிஜ மனிதர்களை போலவே துல்லியமான உதட்டசைவுகளுடன் பேசும் வீடியோவாக மாற்றி தரும். இது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு.


மொழிகளை கடந்த உலகளாவிய தொடர்பு


தமிழ் உட்பட 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த அவதார்கள் பேசும் திறன் கொண்டவை. இது உலகளாவிய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஒரு மிகச்சிறந்த கருவியாகும். வெவ்வேறு இனத்தவர், பாலினம் மற்றும் தோற்றம் கொண்ட நூற்றுக்கணக்கான அவதார்களில் இருந்து உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். மேலும், உங்கள் சொந்த குரலையே AI மூலம் பதிவு செய்து, அதை டிஜிட்டல் அவதாரத்திற்கு பயன்படுத்தும் வசதியும் இதில் உண்டு.


ஒரே கிளிக்கில் பன்மொழி மாற்றம்


ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட வீடியோவை ஒரே கிளிக்கில் 80-க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு தானாகவே மொழிபெயர்க்க முடியும். மேலும், உங்கள் பிளாக் போஸ்ட் அல்லது பிடிஎஃப் கோப்புகளை நேரடியாக வீடியோவாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் நீங்கள் நீண்ட நேரம் செலவழித்து தயாரிக்கும் உள்ளடக்கங்களை மிக எளிதாக வீடியோ வடிவில் வழங்க முடியும்.


பல்வேறு துறைகளுக்கான பயன்கள்


ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க இதன் மூலம் எளிதாக வீடியோக்களை உருவாக்கலாம். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் விளம்பர வீடியோக்களை மிகக்குறைந்த செலவில் தயாரிக்கலாம். கல்வித்துறையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான பாடங்களை சுவாரசியமான வீடியோக்களாக மாற்றினால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மேலும், வாடிக்கையாளர் சேவைத்துறையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு (FAQ) வீடியோ மூலம் பதிலளிக்க இது பெரிதும் உதவுகிறது.


கட்டணத் திட்டங்கள் மற்றும் வரப்பிரசாதம்


இவ்வளவு வசதிகள் கொண்ட Synthesia AI இலவச மற்றும் கட்டண பதிப்புகளில் கிடைக்கிறது. ஆரம்ப நிலையில் சோதனை செய்ய விரும்புபவர்களுக்கு மாதம் 10 நிமிட வீடியோ கிரெடிட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன் பிறகு, மாதம் 18 டாலர் முதல் பல்வேறு திட்டங்கள் உள்ளன; உங்களுக்கு ஏதுவானதை தேர்வு செய்து கொள்ளலாம். வீடியோ எடிட்டிங் அறிவு மற்றும் கேமரா இல்லாமல் நிமிடங்களில் வீடியோ உருவாக்க விரும்புபவர்களுக்குச் Synthesia AI ஒரு வரப்பிரசாதமாகும்.


LightPDF AI: ஆயிரம் பக்கம் இருந்தாலும் அஞ்சே நிமிஷத்துல LightPDF சுருக்கி சொல்லும்! இது வெறும் PDF எடிட்டர் இல்ல… உங்க வேலையை முடிக்க வந்த AI கமாண்டர்!