VoicePal AI : புத்தகத்தை நீங்க படிக்க வேணாம்… உங்களுக்காகப் படிக்க ஒரு AI வந்துருச்சு.. அதுதான் VoicePal AI..உங்கள் பாக்கெட்டில் ஒரு டிஜிட்டல் உதவியாளர்!

 


இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், செய்தித்தாள்களையோ அல்லது நீண்ட கட்டுரைகளையோ அமர்ந்து படிக்க பலருக்கும் நேரமிருப்பதில்லை. வாசிப்பதற்கு பதிலாக தகவல்களை ஆடியோ அல்லது வீடியோ வடிவில் கேட்டு தெரிந்துகொள்வதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த தேவையை பூர்த்தி செய்ய VoicePal என்ற அற்புதமான ஏஐ செயலி அறிமுகமாகியுள்ளது.


VoicePal: உங்கள் பாக்கெட்டில் ஒரு டிஜிட்டல் உதவியாளர்!


புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள் அல்லது இணைய பக்கங்கள் என எதுவாக இருந்தாலும், அதனை இனி நீங்கள் சிரமப்பட்டு வாசிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த செயலி அத்தனையையும் உங்களுக்காக வாசித்து காட்டும். இதன் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால், ஒரு பைசா கூட கட்டணம் செலுத்தாமல் இந்த சேவையை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.


இயற்கையான மனிதக் குரல்கள்


பொதுவாக இத்தகைய செயலிகளில் குரல்கள் இயந்திரத்தனமாக இருக்கும். ஆனால், வாய்ஸ்பால் செயலியில் உள்ள குரல்கள் மனிதர்கள் பேசுவதை போன்றே மிகவும் இயற்கையான ஒலியுடன் இருக்கும். இதில் உள்ள பிரத்யேக பிரவுசர் மூலம் ஆன்லைன் கட்டுரைகளை நேரடியாக ஒலியாக மாற்ற முடியும். மேலும், ஆவணங்களை MP3 கோப்புகளாக சேமித்து வைத்துக்கொண்டு, இணைய வசதி இல்லாத போதும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.


அனைவருக்கும் ஏற்ற தொழில்நுட்பம்


புகைப்படங்கள், பிடிஎஃப்கள் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள எழுத்துக்களை கூட இது OCR தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு துல்லியமாக வாசிக்கும். தமிழ் உட்பட 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் இச்சேவை கிடைப்பது ஒரு கூடுதல் சிறப்பாகும். அலுவலக பணியாளர்கள் பயணத்தின் போதும், மாணவர்கள் தங்கள் பாடங்களை ஆடியோ புத்தகங்களாக மாற்றியும் இதைப் பயன்படுத்தலாம்.


PDF-ஐ ஆடியோவாக மாற்றும் முறை


பிடிஎஃப் கோப்புகளை ஆடியோவாக மாற்ற முதலில் செயலியை திறந்து, ‘அப்லோடு’ பகுதியில் சம்பந்தப்பட்ட கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ‘செட்டிங்ஸ்’ பகுதிக்கு சென்று நீங்கள் கேட்க விரும்பும் மொழியை தேர்வு செய்ய வேண்டும். இதில் 60-க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதால், நமக்கு தேவையான சரியான உச்சரிப்பை தேர்வு செய்வது எளிது.


துல்லியமான வாசிப்பு மற்றும் எடிட்டிங்


இறுதியாக ‘Play’ பொத்தானை அழுத்தினால், செயலி தானாகவே உரையை வாசிக்க தொடங்கும். அப்போது எந்த வார்த்தை வாசிக்கப்படுகிறது என்பது திரையில் ஹைலைட் செய்து காட்டப்படும். உங்கள் பிடிஎஃப் ஸ்கேன் செய்யப்பட்ட கோப்பாக இருந்தாலும், OCR மூலம் அது துல்லியமாக பிரித்தெடுக்கப்படும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும், வாசிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கும் இது ஒரு உன்னதமான கருவியாக திகழ்கிறது.


KIMI Slides AI: மணி கணக்கா உட்கார்ந்து பவர் பாயிண்ட்ல மல்லுக்கட்டுன காலம் முடிஞ்சு போச்சு… இனி KIMI Slides-க் ஒரு Prompt கொடுத்தா போதும், ஸ்லைடு தானா வந்து நிக்கும்!