KIMI Slides AI: மணி கணக்கா உட்கார்ந்து பவர் பாயிண்ட்ல மல்லுக்கட்டுன காலம் முடிஞ்சு போச்சு… இனி KIMI Slides-க் ஒரு Prompt கொடுத்தா போதும், ஸ்லைடு தானா வந்து நிக்கும்!



AI தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட பணிகளை வியக்கத்தக்க வகையில் எளிதாக்கி வருகிறது. கட்டுரை எழுதுவது, இசையமைப்பது என தொடங்கி, தற்போது அலுவலக பணிகளில் மிக முக்கியமான ஒன்றான Presentation உருவாக்குவதையும் இது ஒரு நொடி பொழுதில் செய்து முடிக்கிறது. அந்த வகையில், Moonshot AIஅறிமுகப்படுத்தியுள்ள KIMI Slides ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரசன்டேஷன் உருவாக்கத்தில் ஏஐ-ன் புதிய மேஜிக்!


முன்பெல்லாம் ஒரு தரமான Presentation உருவாக்க பவர் பாயிண்ட்டில் பல மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. சரியான லேஅவுட் அமைப்பது, படங்களை தேடுவது, டிசைன்களை மெருகேற்றுவது என இதற்கு அதிக நேரமும், தொழில்நுட்ப திறமையும் தேவைப்பட்டது. ஆனால், KIMI Slides என்ற இந்த ஏஐ கருவி, வெறும் ஒரு Text Prompt கொடுத்தாலே, அழகான மற்றும் தொழில்முறை தரமான ஸ்லைடுகளை தானாகவே உருவாக்கி தருகிறது.


எளிமையான செயல்பாட்டு முறை


இந்த கருவியை பயன்படுத்த KIMI.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் மூலம் லாகின் செய்ய வேண்டும். அங்குள்ள KIMI Slides என்ற பகுதியை தேர்வு செய்து, உங்களுக்கு என்ன வகையான Presentation வேண்டும் என்பதை விளக்கமாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்காக 10 ஸ்லைடுகளை உருவாக்கு” என்று கட்டளை கொடுத்தால் போதும், அது வேலையை தொடங்கிவிடும்.


துல்லியமான உள்ளடக்கங்கள்


இதில் நாம் கொடுக்கும் பிராம்ட்டிற்கு ஏற்ப company overview, problem statement, solution, product features, target market, competitive analysis போன்ற அனைத்து பகுதிகளையும் அதுவே பகுப்பாய்வு செய்து உருவாக்கிவிடும். இது ஏதோ மேலோட்டமான தகவல்களை வழங்காமல், நாம் கேட்கும் சூழலுக்கு ஏற்றவாறு மிகவும் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களையே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


டிசைன் மற்றும் டெம்ப்லேட் வசதிகள்


KIMI Slides பல்வேறு வகையான அழகான டெம்ப்லேட்டுகளை வழங்குகிறது. இதில் உள்ள படங்கள் மற்றும் டிசைன்களை ஏஐ-யே தானாக தேர்வு செய்து அமைப்பதால், நமக்கு டிசைன் குறித்த அறிவு இல்லாவிட்டாலும் உயர்தரமான ஸ்லைடுகளை பெற முடியும். மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், நேரத்தை சேமிக்கவும் இது ஒரு சிறந்த கருவியாகும்.


எளிதான எடிட்டிங் மற்றும் டவுன்லோட்


ஏஐ உருவாக்கித் தரும் ஸ்லைடுகளில் நமக்கு தேவையான மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். லோகோ, கம்பெனி பெயர், புள்ளிவிவரங்கள் போன்ற எந்த பகுதியையும் கிளிக் செய்து எளிதாக மாற்றியமைக்க முடியும். மேலும், இந்த பிரசன்டேஷனை அப்படியே டவுன்லோட் செய்து, இணைய வசதி இல்லாத போதும் நமது சொந்த டேட்டாவை கொண்டு மெருகேற்றி பயன்படுத்தலாம்.


தொழில்நுட்ப வளர்ச்சியின் மைல்கல்


ஏஐ உலகில் ஒவ்வொரு நாளும் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்பெல்லாம் பல மென்பொருள்களை கொண்டு செய்த வேலையை, இன்று ஒரே ஒரு கட்டளை மூலம் ‘கிம் ஸ்லைட்ஸ்’ போன்ற கருவிகள் செய்து முடிக்கின்றன. இது பிரசன்டேஷன் உருவாக்கும் முறையை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது மட்டுமின்றி, அனைவருக்கும் உயர்தரமான டிசைன்களை அணுகக்கூடிய வகையில் எளிமையாக்கியுள்ளது.


பாஸ்போர்ட்ல இருந்து டிரைவிங் லைசென்ஸ் வரைக்கும் எதுவா இருந்தாலும் சரி… நீங்க ஓகே சொன்னா தான் இனி கூகுள்ல அது இருக்கும், இல்லனா அவுட்!