AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அனைத்து துறையினரும் தங்களை அதற்கு ஏற்றவாறு மாற்றி வருகின்றனர். பழைய கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய AI டூல்ஸ்களை பயன்படுத்துவது தற்போது அவசியமாகியுள்ளது. அந்த வகையில், இதுவரை SEO அதாவது Search Engine Optimization என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது AEO அதாவது Answer Engine Optimization என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதாவது, கூகுள் தேடல் முடிவுகளை காட்டிலும், AI வழங்கும் பதில்களில் முன்னிலை பெறுவதே தற்போதைய மாற்றமாகும்.
கிரியேட்டர்களின் வரப்பிரசாதம்: Writesonic
இந்த மாற்றத்திற்கு ஏற்ப கிரியேட்டர்களை தயார்படுத்தும் வகையில் உருவானதுதான் Writesonic எனும் AI கருவி. 2026-ஆம் ஆண்டில் உங்கள் பிராண்ட் AI தேடல் முடிவுகளில் எங்கே இருக்கிறது என்பதை கண்டறியவும், போட்டியாளர்களை முந்தவும் இது பெரிதும் உதவுகிறது. இது வெறும் AI Writer மட்டுமல்ல, ஒரு முழுமையான SEO தளமாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் பிளாக் கட்டுரைகள், விளம்பர வரிகள், சமூக ஊடக பதிவுகள் என அனைத்தையும் ஒரு சில நொடிகளில் உருவாக்கிவிட முடியும்.
நேரலை விசிபிலிட்டி டிராக்கிங்
Writesonic தளத்தின் மிகச்சிறந்த அம்சம் அதன் விசிபிலிட்டி டிராக்கிங் வசதியாகும். கூகுள் மற்றும் பிற AI தேடல் தளங்கள் உங்கள் பிராண்டை எப்போது பரிந்துரைக்கின்றன என்பதை இது நேரலையில் காட்டும். குறிப்பாக, இது கூகுளின் தற்போதைய Algorithmsகளுக்கு ஏற்ப, துல்லியமான மற்றும் தரமான கட்டுரைகளை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் உள்ளடக்கம் தேடல் முடிவுகளில் முதல் வரிசையில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
போட்டியாளர்களை வெல்லும் நுட்பம்
உங்கள் போட்டியாளர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதுடன், வாடிக்கையாளர்கள் உங்கள் பிராண்டை ஏன் தவிர்க்கிறார்கள் என்ற காரணத்தையும் Writesonic கண்டுபிடித்து சொல்லும். அந்த தவறுகளை சரிசெய்யும் வழிகளையும் இதுவே பரிந்துரைக்கும். மேலும், இதில் உள்ள ‘ஆட்டோமேட்டட் டெக்னிக்கல் எஸ்சிஓ’ வசதி மூலம், உங்கள் இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை AI மூலம் கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய முடியும்.
உண்மையான பயனர் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல்
வழக்கமான கீவேர்டுகளை தாண்டி, 120 மில்லியனுக்கும் அதிகமான AI உரையாடல்களின் அடிப்படையில் பயனர்கள் கேட்கும் Prompts இது வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதை ஆழமாக புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான கட்டுரைகளை உருவாக்கலாம். Writesonic மூலம் எழுதப்படும் கட்டுரைகள் வாடிக்கையாளர்களின் கண்ணில் படும் வகையில் மிகச்சிறப்பாக AEO வடிவமைக்கப்படும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இலவச சோதனை மற்றும் எதிர்காலத் தேவை
இந்த கருவியை ஆரம்பத்தில் இலவசமாக சோதனை முறையில் பயன்படுத்தி பார்க்கலாம். அதன் பிறகு தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் கட்டண பதிப்பை தேர்வு செய்யலாம். சந்தையில் மற்ற எஸ்சிஓ கருவிகள் வலுவாக இருந்தாலும், வருங்காலத்தில் AEO தேடலை மையமாக கொண்டு இயங்குவதுதான் தனித்தன்மையுடன் இருக்கும். ஒரு கட்டுரையை உருவாக்குவது முதல் அதை தேடலில் முன்னிலைப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் இந்த Writesonic அனைத்து எழுத்தாளர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
