AI தொழில்நுட்பம் நாம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், AI சார்ந்த கருவிகள் தினந்தோறும் நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், பணிபுரியும் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாகியுள்ள ஒரு புரட்சிகரமான கருவிதான் Chat Aid.
இன்றைய கார்ப்பரேட் உலகில், ஒரு நிறுவனத்தின் தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கலாம். ஒரு முக்கியமான கோப்பு Slack செயலியில் இருக்கலாம், மற்றொன்று Notion போன்ற தளங்களில் இருக்கலாம். எந்த தகவல் எங்குள்ளது என்பதை தேடிக் கண்டுபிடிப்பதற்கே பல மணிநேரம் வீணாகும் சூழலில், Chat Aid உங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தரவுகளையும் ஒன்றிணைத்து, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மின்னல் வேகத்தில் பதில் வழங்குகிறது.
தகவல் தேடலில் Chai – ஒரு விழிப்புணர்வு கொண்ட உதவியாளர்
Chat Aid கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதில் உள்ள Chai எனப்படும் டிஜிட்டல் உதவியாளர் ஆகும். இது மற்ற சாதாரண தேடுபொறிகளை போல அல்லாமல், மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுகிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கான பதில் உங்கள் நிறுவனத்தின் தரவுகளில் இருந்தால் மட்டுமே அதனை எடுத்து தரும். ஒருவேளை அந்த தகவல் உங்கள் டேட்டாக்களில் இல்லை என்றால், “எனக்கு தெரியாது” என்று வெளிப்படையாக கூறும் நேர்மை கொண்டது. தேவைப்பட்டால் மட்டுமே இது பொதுவான ChatGPT அறிவை பயன்படுத்தி பதில் அளிக்கும். இந்த உதவியாளர் தகவலைத்தருவதோடு மட்டுமல்லாமல், அந்த தகவல் எந்தக் கோப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தையும் இணைத்து வழங்குவது இதன் கூடுதல் சிறப்பாகும்.
எளிமையான பயன்பாடு மற்றும் பன்முகத் தளங்கள்
Chat Aidஐ பயன்படுத்துவதற்கு எவ்வித உயர்தர தொழில்நுட்ப அறிவோ அல்லது Coding திறமையோ தேவையில்லை. இதனை ஒரு சாதாரண பயனர் கூட எளிதாக கையாள முடியும். Slack, Microsoft Teams, Chrome Extension மற்றும் இணையதள டேஷ்போர்டு என பல்வேறு தளங்களில் இதனை பயன்படுத்தலாம். உங்கள் நிறுவனத்தின் CRM, டிக்கெட்டிங் ஆப்ஸ் மற்றும் இதர பணி சார்ந்த மென்பொருள்களுடன் ஒரே கிளிக்கில் இதனை இணைத்து கொள்ள முடியும். இந்த எளிமையான ஒருங்கிணைப்பு முறை, நிறுவனத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
சர்வதேச தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள்
ஒரு நிறுவனத்தின் ரகசிய தரவுகளை AI-யிடம் ஒப்படைக்கும்போது பாதுகாப்பு என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது. இதில் Chat Aid எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை. இது SOC 2 Type II, ISO 27001, GDPR மற்றும் CCPA போன்ற சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றி இயங்குகிறது. இதனால் உங்கள் நிறுவனத்தின் தகவல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படாது என்பது உறுதி செய்யப்படுகிறது.
அனைத்துத் துறைகளுக்கும் ஏற்ற ஆக்கப்பூர்வமான தீர்வு
Chat Aid ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையில், பழைய உரையாடல்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு விரைவான பதில்களை வழங்க இது உதவுகிறது. HR துறையில் நிறுவன கொள்கைகள் மற்றும் விதிகளை தேடவும், பொறியியல் துறையில் சிக்கலான தொழில்நுட்ப ஆவணங்களை எளிதாக அணுகவும் இது வழிவகை செய்கிறது. தயாரிப்பு மேலாண்மை முதல் விற்பனை பிரிவு வரை அனைத்து நிலைகளிலும் தகவல்களை விரைவாகப் பெற இது ஒரு பாலமாக அமைகிறது.
அலைந்து தேடும் நேரத்தைக் குறைக்கும் எதிர்காலக் கருவி
இலவச திட்டம் உட்பட நான்கு விதமான கட்டண திட்டங்களில் Chat Aid கிடைக்கிறது. ஒரு சிறிய குழு முதல் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட பெரிய நிறுவனங்கள் வரை தங்களின் தேவைக்கேற்ப பொருத்தமான திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தேவையில்லாத கோப்புகளை தேடி நேரத்தை வீணாக்குவதை குறைத்து, உருப்படியான வேலைகளில் அதிகக் கவனம் செலுத்த செய்வதே இக்கருவியின் நோக்கம். சுருக்கமாக சொன்னால், உங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அறிவையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வரும் ஒரு ‘ஸ்மார்ட்’ தேடல் கருவிதான் இந்த Chat Aid என்று கூறலாம்.
